scorecardresearch

டாப் கோடீஸ்வரர் பட்டியல்: கீழே விழுந்த அதானி; முந்திய அம்பானி

அதானி குழுமத்தின் பங்குகளை கையாள்வதாக குற்றம் சாட்டி ஒரு அறிக்கையை வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த தகவல் வெளிவந்துள்ளது.

டாப் கோடீஸ்வரர் பட்டியல்: கீழே விழுந்த அதானி; முந்திய அம்பானி

ஃபோர்ப்ஸ் பணக்காரர் பட்டியலில், 84.3 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் பணக்கார இந்தியரான கவுதம் அதானியை முந்தியுள்ளார்.

நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி குழுமத்தின் பங்குகளை கையாள்வதாக குற்றம் சாட்டி ஒரு அறிக்கையை வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த தகவல் வெளிவந்துள்ளது.

ஃபோர்ப்ஸின் தகவல்படி, அம்பானியின் சொத்து மதிப்பு 0.19 சதவீதம் உயர்ந்தது, இதனால் 164 மில்லியன் டாலர் செல்வம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் அதானியின் சொத்துக்கள் 4.62 சதவீதம் குறைந்து தொழில்துறை செல்வம் 84.1 பில்லியன் டாலர்கள் சரிந்தது.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு, அதானி குழுமம் இரண்டு வர்த்தக அமர்வுகளில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்தது. கௌதம் அதானி 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது அவரது மொத்த செல்வத்தில் ஐந்தில் ஒரு பங்கை இழந்தார்.

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் அதிக மதிப்பீடுகள் இருப்பதன் காரணமாக அவற்றின் தற்போதைய நிலையிலிருந்து வீழ்ச்சியடையும் என்று ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி ஆய்வு கவலை தெரிவித்தது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Mukesh ambani overtakes gautam adani as richest indian

Best of Express