Mulayam Singh Yadav: உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் இன்று காலை காலமானார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உ.பி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவுக்கு மருத்துவக்குழு பிரத்யேக சிகிச்சை வழங்கியது. இவர் உடல் நலக்குறைவு காரணமாக ஹரியானாவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆகஸ்டு மாதம் முதல் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்ததால், கடந்த 2ம் தேதி ICU ( தீவிர சிகிச்சை பிரிவு) மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்ததாக சாஜ்வாதி கட்சி அதிகார்ப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உ. பி அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க உள்ளது. மேலும் அவரது இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று உ.பி முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.