லிஃப்ட்டுக்கும் சுவருக்கும் இடையே சிக்கி உயிரிழந்த பெண்… நேவி நகரில் ஏற்பட்ட சோகம்!

லிஃப்டுக்குள் ஓடிய நாயை மீட்கும் போது ஏற்பட்ட விபத்தால் உயிரிழப்பு!

Poes Garden, Teynampet, Jothi Kannagi Nagar , man slept in parkiing area killed ,

mumbai 51-year-old woman trapped between lift and wall  : மும்பை நேவி நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்த 51 வயது மிக்க பெண்மணி லிஃப்டின் சுவருக்கும் லிஃப்டுக்கும் இடையே சிக்கி உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேவி நகரில் இருக்கும் லெஃப்டினண்ட் கர்னலின் வீட்டில் வீட்டு வேலை பார்த்து வந்தவர் ஆர்த்தி தஷ்ரத் பர்தேசி.

கர்னலின் வீட்டில் இருந்த நாயை அழைத்துக் கொண்டு வாக்கிங் சென்றுள்ளார் ஆர்த்தி. அப்போது நாய் லிஃப்டிக்குள் செல்ல, அதனை பிடிக்க முயற்சி செய்திருக்கிறார் ஆர்த்தி. ஆனால் அவர் லிஃப்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் டோங்க்ரே கூறுகையில் “கடற்படை வீரர்களும், உள்ளூர் காவல்துறையினரும் ஆர்த்தியை லிஃப்ட் ஷாஃப்ட்டில் இருந்து 45 நிமிடங்கள் போராடி வெளியே கொண்டு வந்தோம். ஐ.என்.எஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் போது அவர் அங்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். அவர் எப்படி லிஃப்ட் சுவருக்கும் லிஃப்டுக்கும் இடையே மாட்டிக் கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

உடற்கூறு ஆய்வுக்காக அவருடைய உடல் ஜி.டி. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆர்த்தி அவரது கணவருடன் நேவி நகரில் இருக்கும் பணியாளர்களுக்கான குவாட்ரஸில் வசித்து வருகிறார். விபத்தின் காரணமாக உயிரிழந்திருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் மேற்கொண்டு நடைபெறும் என்று கடற்படை தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

To read this article in English

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mumbai 51 year old woman trapped between lift and the wall dies

Next Story
குற்றச் சம்பவங்களில் உ.பி. நம்பர்.1 – தமிழக நிலைமை என்ன? என்சிஆர்பி ரிப்போர்ட்ஸ்National Crime Records Bureau leaves out data on lynchings, khap and religious killings - குற்றச் சம்பவங்களில் உ.பி. நம்பர்.1 - தமிழகத்துக்கு என்ன இடம் தெரியுமா? - என்சிஆர்பி ரிப்போர்ட்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com