மும்பை ஆரே காலனி போராட்டம்: மேலும் மரங்கள் வெட்ட உச்ச நீதிமன்றம் தடை
Mumbai Aarey News: சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்தப் பிரச்னையில் பாஜக ஒரு பக்கமும், மற்ற கட்சிகள் அனைத்தும் மரங்கள் வெட்ட எதிர்ப்பு நிலையிலும் நிற்கின்றன. இந்த விவகாரம் தேர்தலில் எதிரொலிக்குமா?
Mumbai Aarey News: சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்தப் பிரச்னையில் பாஜக ஒரு பக்கமும், மற்ற கட்சிகள் அனைத்தும் மரங்கள் வெட்ட எதிர்ப்பு நிலையிலும் நிற்கின்றன. இந்த விவகாரம் தேர்தலில் எதிரொலிக்குமா?
aarey forest area, mumbai aarey news, mumbai aarey trees, mumbai array forest, மும்பை ஆரே காலனி, மும்பை ஆரே மரம் வெட்டுதல்
Mumbai Aarey Forest Protest: மும்பை ஆரே காலனியில் மேலும் மரங்களை வெட்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ‘இது வரை வெட்டப்பட்டவை தவிர, புதிதாக மரங்கள் வெட்டப்படாது’ என மஹாராஷ்டிரா அரசு உறுதி கொடுத்தது.
Advertisment
மும்பை ஆரே காலனியில், மெட்ரோ ரயில் நிலைய அபிவிருத்திக்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டது. மும்பை மாநகராட்சி இதற்கான அனுமதியை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு வழங்கியது. அதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவில் மரங்கள் வெட்டப்பட்டன.
மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிடும்படி, மும்பை சட்டக்கல்லூரி மாணவர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர். அதன் அடிப்படையில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
Advertisment
Advertisements
அக்டோபர் 7-ம் தேதி (இன்று) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘இதுவரை வெட்டப்பட்ட மரங்கள் தவிர, புதிதாக வெட்டப்பட மாட்டாது’ என உறுதி கொடுத்தார். இந்த உறுதியை நீதிமன்றம் பதிவு செய்தது. ‘இப்போது மரங்கள் எதையும் வெட்டாதீர்கள்’ என உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அசோக் பூஷன் ஆகியோர், ‘ஆரே பகுதி மனுதாரர் குறிப்பிட்டபடி வளர்ச்சியடைந்த பகுதியாகவோ, சுற்றுச்சூழல் சார்ந்த முக்கிய பகுதியாகவோ இல்லை’ என்பதையும் சுட்டிக்காட்டினர். இந்த வழக்கு அக்டோபர் 21-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மெட்ரோ ரயில் 3 அடுக்கு டெப்போவுக்காக மொத்தம் 33 ஹெக்டேர் நிலத்தில் 2185 மரங்களை வெட்டிவிட்டு, 460 மரங்களை திரும்ப நட மெட்ரோ முடிவு செய்தது. அவற்றில் 2134 மரங்கள் வெள்ளிக்கிழமை இரவே வெட்டப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை இரவில் இந்த மரங்கள் வெட்டப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்திய சுமார் 200 நபர்களை கைது செய்து மஹாராஷ்டிரா அரசு விடுதலை செய்தது. கைதானவர்கள் யாரும் காவலில் இருந்தால் அவர்களை விடுவிக்கும்படி, உச்ச நீதிமன்றமும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
மஹாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்தப் பிரச்னையில் பாஜக ஒரு பக்கமும், மற்ற கட்சிகள் அனைத்தும் மரங்கள் வெட்ட எதிர்ப்பு நிலையிலும் நிற்கின்றன. இந்த விவகாரம் தேர்தலில் எதிரொலிக்குமா? என்கிற விவாதமும் நடக்கிறது.