பிச்சையெடுத்தே லட்சக் கணக்கில் சொத்து சேர்த்த முதியவர்… மரணத்திற்கு பின்பு தெரிந்த அதிர்ச்சி உண்மை!

அவருடைய குடும்பத்தினர் ராஜஸ்தானில் வசித்து வருகின்றனர். இந்த பணம் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர் காவல்துறையினர்.

By: Updated: October 8, 2019, 11:07:20 AM

Mumbai beggar dies a millionaire : மும்பை வாஷி ரயில்வே நிலையத்தில் பிச்சை எடுத்து வந்தவர் பிடிசந்த் பனமராம் ஆசாத். அவருக்கு வயது 82. உள்ளூர் ரயில் நிலையங்களில் பிச்சை எடுத்து வந்தார். கோவந்தி வெள்ளிக்கிழமையன்று ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவர் மீது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடைய மறைவைத் தொடர்ந்து அவர் யார் என்று அடையாளம் காண வாஷி ரயில் நிலையம் காவல்துறையினர் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். கோவந்தி ஸ்லம் பகுதியில் இருந்த அவருடைய வீட்டை சோதனை செய்த போது அவருடைய வங்கிக் கணக்கில் 7.7 லட்ச ரூபாய் ஃபிக்ஸ்ட் டெபாசிட் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்த பையில் ரூ. 1.5 லட்சத்திற்கான நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் கண்டறியப்பட்டது.

அவருடைய குடும்பத்தினர் ராஜஸ்தானில் வசித்து வருகின்றனர். இந்த பணம் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர் காவல்துறையினர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவத் துவங்கியதும் நெட்டிசன்கள் எப்போதும் போல் இந்த செய்தியை ட்ரோல் செய்து விட துவங்கினர். “ஐ.டி. எஞ்ஜினியரை விட அதிகமாக பிச்சைக்காரர்கள் பணம் வைத்திருக்கிறார்கள் என்றும், இதனால் தான் நான் யாருக்கும் பிச்சையிடுவதில்லை” என்றும் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க : கேட்பதையெல்லாம் இசைக்கும் யாழ் பறவை… சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Mumbai beggar dies a millionaire cops find fd coins worth rs 10 lakh from his shanty

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X