/tamil-ie/media/media_files/uploads/2019/03/mumbai-bridge-collapse.jpg)
Mumbai bridge collapse
Mumbai bridge collapse : மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் மேஎம்பாலம் இடுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4பேர் பலியானார்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
Mumbai bridge collapse : மும்பை ரயில் நிலையம் பாலம் இடிந்து விபத்து
மும்பை மாநிலத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றானது சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம். இன்று மாலை சுமார் 7.30 மணியளவில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் வேளையில், பலத்த சத்தத்துடன் முதல் நடைமேடையில் இருந்து ரயில் நிலையத்தின் வெளியே செல்லும் நடைமேம்பாலம் இடித்து விழுந்தது.
இதனால் அப்பகுதியே மிகவும் பரபரப்புக்கு ஆளானது. உடனடியாக, அப்பகுதிக்கு விரைந்த மீட்புப் படையினர், விரைந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டனர்.
முதற்கட்டமாக வெளியான தகவலின்படி விபத்து சிக்கிய ஒருவர் பலியானதாகவும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 7.30 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில், பாலத்தில் பெரும்பாலான பகுதியானது, டாக்டர் டி.என். சாலை மீது விழுந்துள்ளது என்றும், இதனால் அருகே உள்ள ஜேஜே பாலத்தில் கடுமையாக போக்குவரத்து ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மும்பை முதல்வர் தேவேந்திர ஃபத்நாவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கிறார். இந்த விபத்து ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், பாஜக எம்.எல்.ஏ ராஜ் புரோஹித் கூறுகையில், “இது எதிர்பாராத விபத்து. இந்த விபத்து நடந்திருக்கவே கூடாது. இந்த பாலத்திற்கு ஒப்புதல் அளித்த எஞ்சினியருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.