By: WebDesk
Updated: February 5, 2019, 12:56:07 PM
பைக் திருடன்
மகாராஷ்ட்ராவில் காதல் மனைவிக்காக கணவர் பைக் திருடனாக மாறிய கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதலுக்கு கண்ணுதான் இல்லனு சொல்லுவாங்க.. அறிவுக்கூடவா பாஸ் இருக்காது. காதல் மனைவி ஆசைப்பட்ட காரணத்திற்காகவும், அவளை தினமும் ஆபிஸூக்கு காரில் அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக படித்த இளைஞர் தனது நணபர்களுடன் சேர்ந்து பைக் திருட்டில் ஈடுப்பட்டுள்ளார்.
இதுவரை 35 வாகனங்களை திருடிய அந்த கும்பல் கையும் களவுமாக போலீசாரிடம் பிடிப்பட்டனர். 22 வயதாகும் சுசாந்த் சமீபத்தில் காதல் திருமணம் செய்துக் கொண்டார். மிடில் கிளாஸ் ஃபேமலியான இவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஒருநாள் சுதாந்தின் மனைவி கார் ஒன்றை பார்த்து ஆசைப்பட்டார். தினமும் காரில் வந்து இறங்கும் சக ஊழியர்களை பற்றி பெருமையாக தனது கணவரிடமும் பகிர்ந்துள்ளார். இதை கேட்டு வருத்தம் அடைந்த சுசாந்த் உடனே தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற நினைத்துள்ளார்.
ஆனால் கார் வாங்க கூடிய அளவிற்கு அவரிடம் முன்பணம் இல்லாததால் தனது ந்ண்பர்களுடன் இணைந்து உயர் தர பைக்குகளை திருடி அதை பிரித்து பிரித்து விற்று பணம் சேர்த்துள்ளார். இப்படியே இதுவரை சுமார் 35 பைக்குகளை திருடிய சுதாந்த் மற்றும் அவரது கூட்டாளிகளை மகாராஷ்ட்ரா காவல் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் மூலம் இவர்கள் பிடிப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.