Advertisment

மும்பை வோர்லியில் பயங்கரம்; பெண்ணை 100 மீட்டர் இழுத்துச் சென்ற அதிவேக பி.எம்.டபிள்யூ கார்

போலீஸ் வட்டாரங்களின்படி, இந்த வாகனம் பால்கரைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவருக்குச் சொந்தமானது என்றும், டிரைவருடன் அவரது மகனும் காருக்குள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Mumbai hit and run case Speeding BMW rams into bike in Worli drags woman for 100 metres to death

பிஎம்டபிள்யூ காரில் அமர்ந்திருந்த இருவர் மீது வோர்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் காரின் நம்பர் பிளேட் மீண்டும் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டபோது அகற்றப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை வொர்லியில் பைக் மீது வேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார் மோதியதில், காரின் பானட்டில் சிக்கி பெண் 100 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்தில் பெண்ணின் கணவர் படுகாயம் அடைந்தார்.
இந்நிலையில், குற்றவாளிகளை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். புனேவில் போர்ஷே கார் சம்பந்தப்பட்ட ஹிட் அண்ட் ரன் வழக்கில் ஏற்பட்ட பெரும் சலசலப்பு முடிவுக்கு வராத நிலையில் இந்தப் புதிய விபத்து நடந்துள்ளது.
அந்த விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டார். இந்நிலையில், போலீஸ் வட்டாரங்களின்படி, இந்த வாகனம் பால்கரைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவருக்குச் சொந்தமானது என்றும், டிரைவருடன் அவரது மகனும் காருக்குள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அட்ரியா மால் அருகே அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த அந்த பெண் வொர்லி கோலிவாடாவில் வசிக்கும் காவேரி நக்வா (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் தனது கணவருடன் சசூன் படகுத்துறையில் இருந்து மீன்களை வாங்கிக்கொண்டு விற்பதற்காக திரும்பிக்கொண்டிருந்தார்.
கார் தம்பதியின் ஸ்கூட்டரில் மோதியதைத் தொடர்ந்து அவர்கள் சமநிலையை இழந்து வாகனத்தின் பானெட்டின் மீது விழுந்தனர். இதில் உயிரிழந்த காவேரி 100 மீட்டர் வரை காரால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் அவரை நாயர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையில் கணவர் சிகிச்சை பெற்று வருகிறார். பிஎம்டபிள்யூ காரில் அமர்ந்திருந்த இருவர் மீது வோர்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் காரின் நம்பர் பிளேட் மீண்டும் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டபோது அகற்றப்பட்டது.
அவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என மண்டல டி.சி.பி. வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் பணி நடந்து வருகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் வாசிக்க : Mumbai hit-and-run case: Speeding BMW rams into bike in Worli, drags woman for 100 metres to death

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment