அதிக பணிக்காரர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 271 பணக்காரர்கள் உள்ளனர். மேலும் அதிக பணக்காரர்கள் கொண்ட நகரத்தின் வரிசையில் மும்பை 3 ம் இடத்தில் உள்ளது.
ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2024, வெளியிட்ட தகவலில் உலக பணக்காரர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் உலகம் முழுவதும் 3,279 பணக்காரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 814 பணக்காரர்கள் சீனாவில் உள்ளனர். இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் 800 பணக்காரர்கள் உள்ளனர். இதைத்தொடர்ந்து இந்தியாவில் அதிக பணக்கார்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டை விட அமெரிக்காவில் 109 பேரும், இந்தியாவில் 84 பேரும் புதிதாக பட்டியலில் இணைந்துள்ளனர். ஆனால் சீனாவில் 155 பேர் குறைந்துள்ளனர்.
ஆசியாவில் அதிக பணக்கார்கள் உள்ள நகரத்தின் பட்டியலில் மும்பை, சீனாவின், பீஜிங் நகரத்தை விட முன்பாக உள்ளது. இந்நிலையில் இந்த பட்டியலில் வரலாற்றில் முதல்முறையாக இது நடந்துள்ளது. மேலும் இந்தியாவின் தலைநகரமான டெல்லி, அதிக பணக்காரர்களை கொண்ட நகரங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது.
உலக பணக்கார்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதல் இடத்தில் உள்ளார். மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் லாரி பேஜ் ஆகியோர் இந்த முறை புதிதாக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2024 என்பது வருடத்திற்கு ஒரு முறை உலக பணக்கார்களை அமரிக்கன் டாலர் அடிப்படையில் வரிசைபடுத்துவது. ஹுருன் ஆய்வு நிறுவனம், இந்த அறிக்கையை வெளியிடுகிறது.
அதிக பணக்கார்களை கொண்ட முதல் 10 நாடுகள்
- சீனா
- அமெரிக்கா
- இந்தியா
- இங்கிலாந்து
- ஜெர்மனி
- சுவிட்சர்லாந்து
- ரஷ்யா
- இத்தாலி
- பிரான்ஸ்
- பிரேசில்
டாப் 10 – உலக பணக்காரர்கள் பட்டியல்
- எலான் மஸ்க் – டெஸ்லா- அமெரிக்கா
- ஜெப் பெசோஸ்- அமேசான் - அமெரிக்கா
- பெர்னார்ட் அர்னால்ட்-எல்.வி.எம்.எச்- பிரான்ஸ்
- மார்க் ஜுக்கர்பெர்க்- மெட்டா- அமெரிக்கா
- லேரி எலிசன்- ஆர்கிள்- அமெரிக்கா
- வாரன் பஃபெட்- பெர்க்சயர் ஹாதவே- அமரிக்கா
- ஸ்டீவ் பால்மர்- மைக்ரோசாட்- அமரிக்கா
- பில்கேட்ஸ் – மைக்ரோசாட்- அமெரிக்கா
- லாரி பேஜ்- அல்ஃபபெட் – அமெரிக்கா
- முகேஷ் அம்பானி – ரிலையன்ஸ் – இந்தியா
அதிக பணக்காரர்களை கொண்ட டாப் 10 நகரங்கள்
- நியூயார்க்
- லண்டன்
- மும்பை
- பீஜிங்
- ஷாங்காய்
- ஷென்சென்
- ஹாங் காங்
- மாஸ்கோ
- டெல்லி
- சான் பிரான்சிஸ்கோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Read in english