"ஸ்டாண்ட்அப்" காமெடியனாக அதுவும் அரசியல் நையாண்டிகளில் பெயர் பெற்றவருமான குணால் கம்ராவின் காமெடி நிகழ்ச்சி மும்பையின் கார் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது."நயாபாரத்" என பெயரிடப்பட்ட அந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் தற்போதைய அரசியல் குறித்து குணால் கம்ரா பேசினார். அதில், ஷிண்டே சிவசேனை கட்சியை இரண்டாகப் பிரித்து பாஜகவுடன் கூட்டணி வைத்ததை விமர்சித்த குணாள் கம்ரா, ஷிண்டேவை துரோகி எனக் கூறினார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/24/M9ePvoRi75Fon4UYp9fR.jpg)
மேலும், ஷிண்டேவை கேலி செய்யும் விதமாக அவரது பெயரைக் குறிப்பிடாமல் அவரது தோற்றத்தை மட்டும் குறிப்பிட்டு தானேவில் இருந்து ஒரு தலைவர் என்ற பாடலை பாடி அதனை தனது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தார் குணாள் கம்ரா.
இதனால், கோபமடைந்த சிவசேனை கட்சித் தொண்டர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கம் இருக்கும் ஹோட்டலை சூறையாடினர். நாற்காலிகள், மேசைகள் மற்றும் விளக்குகளை அடித்து நொறுக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அங்கிருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்திய நிலையில், குணாள் கம்ராவை கைது செய்யுமாறு போலீஸில் புகாரளித்துள்ளனர்.
ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா மீது மும்பை எம்.ஐ.டி.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹோட்டலை சூறையாடிய யுவசேனா பொதுச்செயலாளர் ரஹூல் கனல் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சேனா தொண்டர்கள் 20 பேரை கைது செய்தனர். குணால் கம்ராவுக்கு சர்ச்சைகள் புதிதானது அல்ல. அவரது அரசியல் நகைச்சுவை நிகழ்ச்சிகள் தொடர்பாக பலமுறை அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
”சிவசேனை கட்சியினரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு என்பது எங்கு இருக்கிறது?” என சிவசேனை (யுபிடி) கட்சித் தலைவர் ஆதித்யா தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.