Advertisment

சீரம் இன்ஸ்டிடியூட்-ல் திடீர் தீவிபத்து : 5 பேர் பலியானதாக தகவல்

Serum Institute Fire Accident : புனேயில் மஞ்சரியில் அமைந்துள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) வளாகத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட  திடீர் தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
சீரம் இன்ஸ்டிடியூட்-ல் திடீர் தீவிபத்து : 5 பேர் பலியானதாக தகவல்

புனேயில் உள்ள மஞ்சரியில் அமைந்துள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்துடன் இணைந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தயாரித்துள்ளது. தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த தடுப்பூசி கடந்த 2 தினங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது.

Advertisment

தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் இன்று ஏற்பட்ட திடீர் தீவிபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிற்காக கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனையடுத்து தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், இறந்த 5 பேரின் சடலங்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இந்த தீ விபத்தில் ஐந்து பேர் உயிர் இழந்தது துரதிர்ஷ்டவசமானது இது குறித்து விசாரணை நடத்தப்படும் என புனே மேயர் முர்லிதர் மோஹல் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தீவிபத்து நடைபெற்ற கட்டிடம் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் கட்டிடத்திற்கு தொலைவில் உள்ளது என தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், தீவிபத்தினால் அந்த பகுதியில் ஏற்பட்ட வெப்பத்தை குறைக்கும் நோக்கில் தண்ணிர் தெளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள புனே நகர தீயணைப்பு படையின் தலைமை தீயணைப்பு அதிகாரி பிரசாந்த் ரான்பைஸ் இந்த விபத்தில் சிக்கிய ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்ல தனது ட்விட்டர் பதிவில், “எங்களுக்கு சில துன்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிந்தோம். நாங்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம், இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட மூன்றாவது மாடி ரோட்டா வைரஸ் ஆய்வகம் என்று கூறிய தொழிற்சாலை மேலாளர் விவேக் பிரதான்,  “கோவிஷீல்ட் தயாரிக்கும இடத்திற்கும் இந்த தீவிபத்து ஏற்பட்ட இடத்திற்கும் தொடர்பு இல்லை எனவும், தெரிவித்துள்ளார். மேலும் மின்சார மற்றும் குழாய் பொருத்தும் பணிகள் நடந்து கொண்டிருந்ததாவும்,  மொட்டை மாயில் தீயில் சிக்கிய 4 நபர்கள்  தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகையில்,

இந்த தீ விபத்தால் உயிர் சேதம் அல்லது பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. உங்கள் அக்கறை மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி. மேலும் தீவிபத்து காரணமாக சீரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் (கொரோனா தடுப்பு மருந்து) உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அனைத்து அரசாங்கங்களுக்கும் பொதுமக்களுக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Pune Serum Institute
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment