10 மணி நேரத்தில் 254 மி.மீ மழை… தத்தளிக்கும் வர்த்தக தலைநகரம்!

மேற்கு மற்றும் கிழக்கு புறநகர் பகுதிகளில் முறையே 84.77 மி.மீ மற்றும் 79.27 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

By: August 4, 2020, 1:24:04 PM

Mumbai Rains :  மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில் கடந்த 10 மணி நேரத்தில் 254 மிமீ மழை பதிவாகியுள்ளது. மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை மட்டுமில்லாமல் சியோன், தாதர் ஹிந்த்மட்டா, மாலட் ஆகிய பகுதிகள் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. மேற்கு ரயில்வே சர்ச்காட் மற்றும் அந்தேரி இடையே ரயில் சேவை நிறுத்தி வைத்துள்ளது.

இடுப்பளவு தண்ணீர் சூழந்துள்ள நிலையில் இன்று அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் மற்றும் புதன்கிழமை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவர்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிரிஹன் மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை மூன்று மணி வரை மும்பையில் மட்டும் 140.5 மி.மீ கனமழை பதிவாகியுள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு புறநகர் பகுதிகளில் முறையே 84.77 மி.மீ மற்றும் 79.27 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Mumbai rains mumbai and its suburban record 254 mm rain in 10 hours

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X