/tamil-ie/media/media_files/uploads/2019/07/DSC02610.jpg)
mumbai rains
mumbai rains : மும்பை தொடர் கனமழையால் மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதந்து வருகிறது. தொடர்ந்து 4 ஆவது நாளாக பெய்து வரும் கனமழையால் மும்பை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக மும்பையில் சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக பஸ், ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில் உள்ள அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மும்பை, பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. குர்லா, அந்தேரி, பாந்த்ரா, சாந்தாகுரூஸ், சர்னி ரோடு, பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் உட்பட நகரின் பெரும்பாலான இடங்களில் பெய்த மழை காரணமாக சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மும்பை நகரம் வெள்ளக்காடாக மிதக்கும் கோரத்தை புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு..
மும்பையின் பிம்பிரிபாடா என்ற பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் புனேவில் உள்ள கல்லூரி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். மும்பையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.