திங்கட்கிழமை அதிகாலை மகாராஷ்டிராவில் வாபி மற்றும் பால்கர் நிலையங்களுக்கு இடையே மும்பை செல்லும் ரயிலில் பயணித்த மூன்று பயணிகளையும், உதவி சப்-இன்ஸ்பெக்டரையும் (ASI), ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) கான்ஸ்டபிள் சுட்டுக் கொன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சேத்தன் குமார் என அடையாளம் காணப்பட்ட அந்த RPF கான்ஸ்டபிளை அரசு ரயில்வே காவல்துறை (GRP) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் எண் 12956, ஜெய்ப்பூர்-மும்பை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸில் அதிகாலை 5.23 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. குமார் மற்றும் அவரது மூத்த ASI அதிகாரி, டிகா ராம் ஆகியோர் பாதுகாப்பிற்காக ரயிலில் நிறுத்தப்பட்டனர், அப்போது சில தனிப்பட்ட மற்றும் தொழில் பிரச்சினைகளில், குமாருக்கும் ராமுக்கும் இடையே வாக்குவாதம் வந்துள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சேத்தன் குமார் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால், அதிகாரி டிகாவையும், மூன்று பயணிகளையும் சுட்டுக் கொன்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டிகா ராமை சுடுவதற்கு முன், குமார் பி5 பெட்டியில் பயணிகளை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏ.எஸ்.ஐ. டிகா ராம் மற்றும் மூன்று பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது வருத்தம் அளிக்கிறது. கான்ஸ்டபிள் சேத்தன் குமார் தாஹிசர் அருகே எச்சரிக்கை சங்கிலியை இழுத்து, தப்பி ஓட முயன்றார்.
ஆனால், அவர் ஆயுதத்துடன் ஆர்.பி.எஃப், பயந்தரால் கைது செய்யப்பட்டார், என்று ஒரு அதிகாரி கூறினார்.
விசாரணை நடந்து வருகிறது, மேலும் சம்பவங்களின் சரியான காரணத்தை கண்டறிய குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பிற பயணிகளை நாங்கள் விசாரிக்கிறோம், என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இறந்தவர்களின், குடும்பங்கள் தொடர்பு கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் அவர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்படும், என்று ஆர்.பி.எஃப். அதிகாரி ஒருவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“