மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் இருந்து சியரா லியோன் நாட்டைச் சேர்ந்த பிந்து ஜானே (50) என்ற பெண்ணை பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவரது கைப்பையில் 500 கிராம் கொக்கைன் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த விமானப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜானே கூறுகையில், அடிஸ் அபாபாவில் இந்தப் பொட்டலம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறினார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “இந்த பொட்டலத்தை அந்தப் பெண்ணிடம் வழங்கிய வழங்கிய நபர், மும்பையில் உள்ள கூட்டாளியிடம் ஒப்படைக்கும்படி கூறியுள்ளார். இதற்காக பெரிய தொகை பேசப்பட்டுள்ளது” என்றார். அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தில், தான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், தன்னிடம் பணம் இல்லாததால் இதை செய்ததாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“