அண்மையில் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சமாக மாதம் ரூ10,000 வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கணவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அந்த பெண்ணுக்கு கணவரிடம் ஜீவனாம்சம் பெற முழு உரிமை உள்ளது என கூறி மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டனர். "சட்டப்பிரிவு 125 இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்கியாக வேண்டும். எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் திருமணமான அனைத்து பெண்களுக்கும் அது பொருந்தும். மதச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள் (விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 விஞ்ச முடியாது.
ஜீவனாம்சம் என்பது பெண்களின் உரிமை. மனைவி உணர்வு ரீதியாகவும் பிற வகையிலும் தங்களை சார்ந்து இருப்பதை சில கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. இந்திய குடும்பங்களில் இல்லத்தரசிகளின் பங்கையும், தியாகத்தையும் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றும் தீர்ப்பு அளித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Muslim board to explore ways to overturn Supreme Court’s alimony verdict
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் ஜீவனாம்ச தீர்ப்பை ரத்து செய்வதற்கான வழிகளை முஸ்லிம் வாரியம் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு "இஸ்லாமிய சட்டத்திற்கு (ஷரியா) எதிரானது" என்று தெரிவித்துள்ள அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏ.ஐ.எம்.பி.எல்.பி), இந்த முடிவை "திரும்பப் பெறுவதை" உறுதிசெய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் தொடங்குவதற்கு அதன் தலைவருக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் போட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் கூட்டத்தில் இந்த பிரச்சினையை விவாதித்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் செயற்குழு கூடியது. அப்போது, “அல்லாஹ்வின் பார்வையில் விவாகரத்து செய்வது சாத்தியமான அனைத்து செயல்களிலும் மிகவும் வெறுக்கத்தக்கது என்று புனித நபி குறிப்பிட்டுள்ளார். எனவே அனைத்தையும் விண்ணப்பித்து திருமணத்தைத் தொடர விரும்பத்தக்கது. அதைப் பாதுகாக்க அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள்” என வலியுறுத்தியது.
"இருப்பினும், திருமண வாழ்க்கையைப் பராமரிப்பது கடினமாக இருந்தால், விவாகரத்து மனிதகுலத்திற்கு ஒரு தீர்வாக பரிந்துரைக்கப்பட்டது," என்று வாரியம் அதன் அறிக்கையில் கூறியது. மேலும், "இந்த தீர்ப்பு அவர்களின் வலிமிகுந்த உறவில் இருந்து வெற்றிகரமாக வெளியே வந்த இந்த பெண்களுக்கு மேலும் சிக்கல்களை உருவாக்கும்." என்றும், "திருமணம் இல்லாதபோது, தனது முன்னாள் மனைவிகளைப் பராமரிக்க ஆண் பொறுப்பு என்ற மனிதப் பகுத்தறிவு என்பது நல்லது இல்லை" என்றும் வாரியம் வலியுறுத்தியது.
மேலும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அதன் தலைவர் ஹஸ்ரத் மௌலானா காலித் சைபுல்லா ரஹ்மானிக்கு "உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவை திரும்பப் பெறுவதை உறுதிசெய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் (சட்ட, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக) தொடங்க" அதிகாரம் அளித்து தீர்மானம் போட்டது.
இதுகுறித்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் (ஏஐஎம்பிஎல்பி) செய்தித் தொடர்பாளர் சையத் காசிம் ரசூல் இல்யாஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் எதிர்க் கட்சிகளிடம் பேசவும் வாரியம் முடிவு செய்துள்ளது. எங்களது சட்டக் குழு மனு ஒன்றைத் தயாரித்துள்ளது, அது இந்த மாத இறுதியில் உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்." என்றும் அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“