Advertisment

பில்கிஸ் பானு வழக்கு: அச்சத்தால் கிராமத்தை விட்டு வெளியேறும் இஸ்லாமியக் குடும்பங்கள்

பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 பேர் விடுதலை செய்யப்பட்ட பிறகு, இஸ்லாமிய குடும்பங்கள் ரந்திக்பூர் கிராமத்திலிருந்து தங்களது வீடுகளை விட்டு தாகோத் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்றுள்ளனர்.

author-image
WebDesk
New Update
பில்கிஸ் பானு வழக்கு: அச்சத்தால் கிராமத்தை விட்டு வெளியேறும் இஸ்லாமியக் குடும்பங்கள்

பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 பேர் விடுதலை செய்யப்பட்ட பிறகு, இஸ்லாமிய குடும்பங்கள் ரந்திக்பூர் கிராமத்திலிருந்து தங்களது வீடுகளை விட்டு  தாகோத் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்றுள்ளனர்.

Advertisment

2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நடைபெற்ற மதக் கலவரத்தில்  21 வயதான கர்ப்பிணி பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார். அவரது குழந்தை மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் கடந்த ஆக்ஸ்டு 15ம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்த செய்தி வெளியாகிய சில நாட்களிலேயே 11 குற்றவாளிகள் வசித்து வரும் ரந்திக்பூர் கிராமத்திலிருந்து தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு இஸ்லாமியர்கள், நிவாரண முகாம்களுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.  தாகோத் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களுக்கு தற்போது தங்களது உடமைகளுடன் வந்தடைந்த 24 வயதான சுல்தானா கூறுகையில் “ கடந்த வாரம் முதல் இஸ்லாமியர்கள் மத்தியில் ஒரு பயம் உருவாக தொடங்கியது. நேரடியாக மிரட்டல் வரவில்லை என்றாலும். 11 பேர் விடுதலையை தொடர்ந்து நடைபெற்ற கொண்டாட்டங்கள். பயத்தை உருவாக்கியுள்ளது. அங்கே இருப்பது பாதுகாப்பாக இருக்காது. அவர்கள் பரோலில் வெளியே வரும் போது இருந்த நிலை வேறு தற்போது அவர்கள் முற்றுலுமாக விடுதலை செய்யப்பட்டுள்ளபோது இருக்கும் நிலை வேறு” என்று கூறியுள்ளார்.

தாகோத் மாவட்டத்தின்  இஸ்லாமிய சமூகத்தினர் இந்த விவாகரம் தொடர்பாக தங்களது எதிர்ப்பை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர். 11 பேர் விடுதலையை திரும்பப்பெற வேண்டும் என்றும் சட்டத்தின்மீது உள்ள நம்பிக்கையை மீட்டெக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முவைத்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அமைதிப்பேரணி நடத்த அனுமதி கேட்டுள்ளனர்.

சுல்தாவின் தாய் மற்றும் சுல்தானா தினக் கூலி வேலை செய்பவர்கள். 2002ம் ஆண்டு மத கலவரத்தின்போது ரந்திக்பூர் கிராமத்திலிருந்து தப்பிச் சென்ற காட்சிகள் பற்றி சுல்தாவின் தாய் கூறுகையில் “ அந்த கொடூரமான நாட்கள் என் நினைவில் இருக்கிறது. நாங்கள் அதிர்ஷடவசமாக தப்பிச் சென்றுவிட்டோம். பில்கிஸ் பானுவைப்போல் போராட எங்களுக்கு மன உறுதியில்லை. கேஷர்புராவில் ஆளும் கட்சியினர் அவர்களுக்கு கொடுத்த பாதுகாப்பை பார்த்தபோது அதீத அச்சம் ஏற்பட்டது. எனது மகளை இருக்கமாக அணைத்துக்கொண்டேன்” என்று அவர் கூறினார்.

பில்கிஸ் பானுவின் குடும்பத்தினர் அவர்கள் வாழ்ந்து வந்த காலனி பகுதியிலிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு இடத்திற்கு சென்றுள்ளனர். மேலும் அவரது கணவர் கூறுகையில் “பில்கிஸ் பானு இவ்வளவு நாட்கள் சேர்த்து வைத்த எல்லா துணிச்சலையும் ஒன்றுதிரட்டி  போராட உள்ளார். எங்களுக்கு துணையாக நிற்பவர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம் மேல் முறையீடு செய்ய உதவி கேட்டிள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

ரந்திக்பூர் கிராமத்திலிருந்து 8 கிமீ தொலைவில் பாஜக எம் தவூத் ஜஸ்வாந்த்சிங் பாப்ஹோர் சுகாதார மையங்களை துவக்கி வைத்துள்ளார். ஆனால் மாவட்ட அதிகரிகள், ரந்திக்பூர் கிராமத்தில் எந்த நிகழ்வுகளும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளனர்.

பில்கிஸ் பானு வழக்கில் சாட்சிகளின் சார்பாக மனுக்கள் தாக்கல் செய்த அப்துல் ரசாக் கூறுகையில் “ நிவாரண முகாம்களில்தான் எங்களது எல்லா குழந்தைகளும் பிறந்துள்ளனர். 74 வீடுகளுடன் இந்த காலனியில் 2004 ஆம் ஆண்டு குடியேறினோம். குற்றவாளிகளுக்கு தண்டை கிடைத்ததால், மீண்டும் எங்கள் சொந்த கிராமத்திற்கு செல்லலாம் என்று இங்கே இருப்பவர்கள் நினைத்தார்கள். ஆனால் தற்போது நிலை மாறிவிட்டது. நாங்கள் யாரும் அங்கே செல்ல வரும்பவில்லை “ என்று அவர் கூறியுள்ளார்.

சமீரா பட்டேல் என்பவர் பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாலியான ராதேஷ்ஷியம் ஷா , மித்தேஷ் பட், மற்றும் ஷாவின் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். 2017ம் ஆண்டு ராதேஷ்ஷியம் ஷா பரோலில் வெளியான போது நடைபெற்ற சண்டையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சமீரா பட்டேலும் அப்பகுதியிலிருந்து நிவாரண முகாமிற்கு வந்துவிட்டார்.

இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்று சமீரா பட்டேலின் வழக்கறிஞர் கூறுகிறார்.

இஸ்லாமியர்களின் குடும்பத்தினர் அக்கிராமத்தை விட்டு வெளியேறுவது தொடர்பாக அப்பகுதி காவல்துறையினருக்கு எந்த தகவலும் தெரியாது என்று அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment