Advertisment

கேரளாவில் ஒரு இந்துவின் இறுதிச் சடங்கிற்காக மத நம்பிக்கையை ஒதுக்கி வைத்த இஸ்லாம் குடும்பம்

பாலக்காட்டைச் சேர்ந்த ராஜன், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர், மலப்புரத்தைச் சேர்ந்த சமூக சேவகரும், உள்ளூர் காங்கிரஸ் அரசியல்வாதியுமான கே.வி.முகம்மது, புத்தனாத்தணியில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தில் உணவுக்காக நின்றபோது, அலங்கோலமான தோற்றத்துடன் ஒரு இளைஞனை கவனித்தார்.

author-image
WebDesk
New Update
Malapuram

Muslim family puts faith aside to cremate Hindu orphan who grew up with them

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விதானசேரி ராஜன் 39 ஆண்டுகளாக கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஒரு கட்டுப்பாடான முஸ்லிம் குடும்பத்தில் இந்துவாக வாழ்ந்தார்.

Advertisment

செவ்வாயன்று, அவர் தனது 62 வயதில் இறந்தபோது, ​​இந்து சடங்குகளின்படி, ராஜனுக்கு இறுதி சடங்கு செய்வதற்காக, அலிமோன் நாரணிபுழா தனது சொந்த மத நம்பிக்கையை ஒதுக்கி வைத்தார்.

மாநிலத்தின் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டத்தின் மத நல்லிணக்கத்தின் கதை இத்துடன் முடிவடையவில்லை.

ராஜனின் உடலை ஒரு பொது சுடுகாட்டில் எரியூட்டிய அலிமான், இப்போது பாரதப்புழா ஆற்றில் கரைக்க  தனது அன்புக்குரிய சகோதரனின்அஸ்தியை சேகரிக்க காத்திருக்கிறார்.

"ராஜனின் நம்பிக்கையின்படி தகனம் செய்வதற்காக நான் என் நம்பிக்கையை ஒரு கணம் ஒதுக்கி வைத்தேன்" என்று அலிமான் (46) கூறினார்.

பாலக்காட்டைச் சேர்ந்த ராஜன், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர்.

சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர், மலப்புரத்தைச் சேர்ந்த சமூக சேவகரும், உள்ளூர் காங்கிரஸ் அரசியல்வாதியுமான கே.வி.முகம்மது, புத்தனாத்தணியில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தில் உணவுக்காக நின்றபோது, ​​ அலங்கோலமான தோற்றத்துடன் ஒரு இளைஞனை கவனித்தார்.

அவன் பசியால் வாடிப் போயிருந்தான். அவன் தனது கிராமத்திற்குத் திரும்புவதற்கு உணவு மற்றும் பணத்தை முஹம்மது வழங்கினார்.

ஆனால் ராஜன் சாலையோரம் எங்கு செல்வது என தெரியாமல் நடக்க தொடங்கியபோது, ​​முகமது அவரைப் பின்தொடர்ந்து சென்று அந்த இளைஞரை நன்னமுக்கில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

ஆறு மகள்கள் மற்றும் ஒரு மகன் கொண்ட முகமதுவின் கண்ணம்சாத்து வளப்பில் ராஜன் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். சில நாட்களுக்குப் பிறகு ராஜனை வீட்டிற்கு அனுப்புவது திட்டம், ஆனால் அந்த இளைஞன் செல்ல இடம் இல்லாததால், அவரைப் பார்க்க நெருங்கிய உறவினர்கள் இல்லாததால், முகமன் அவனை தங்களுடன் தங்க வைத்தார்.

மெல்ல மெல்ல ராஜன், அந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினரானார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முகமது 65 வயதில் இறந்தார்.

எனது தந்தை இறந்தபோது, ​​ராஜனை ஏதாவது புகலிடத்திற்கு ஒப்படைக்கும்படி மக்கள் என்னிடம் கேட்டார்கள். ஆனால் நான் அவரைக் கைவிடத் தயாராக இல்லை; என் தந்தையால் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒருவரைப் பராமரிப்பதில் ஒரு நல்ல அறம் இருப்பதை நான் கண்டேன், ’என்றார் அலிமான்.

தனது சொந்த கிராமத்திற்கு அரிதாகவே செல்லும் ராஜன், முஸ்லீம் குடும்பத்தில் வளர்ந்தார், வீட்டில் வேலை செய்வதற்கும் அவர்களின் சிறிய விவசாய நிலத்திலும் அவர்களுக்கு உதவி செய்தார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதெல்லாம், அலிமோனின் குடும்ப உறுப்பினர்கள் அவருக்குப் பக்கத்தில் நின்றனர். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், உள்ளூர்வாசிகள் மீண்டும் அவரை ஒரு நிவாரண இல்லத்திலோ அல்லது தங்குமிடத்திலோ கைவிடுமாறு குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினர், ஆனால் அவர்கள் செவிசாய்க்கவில்லை.

செவ்வாய்கிழமை, தகனம் செய்வதற்கு முன்பு, ராஜனின் உடல் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டில், மின்னும் விளக்குக்கு அடுத்ததாக வைக்கப்பட்டது. சுடுகாட்டில், அலிமோன் மற்றும் அவரது மருமகன் முகமது ரிஷான் ஆகியோர் தீ ஏற்றினர்.

அவரது ஆத்மா சாந்தியடைய அனைத்து சடங்குகளையும் இந்து முறைப்படி செய்வோம் என்றார்.

எங்கள் குடும்பத்தில் ஒரே கூரையின் கீழ் நாங்கள் முஸ்லீம்களாகவும், ராஜன் இந்துவாகவும் வாழ்ந்தோம். நாங்கள் மசூதிக்கு சென்றபோது, ​​ ராஜன் உள்ளூர் கோவிலில் பிரார்த்தனை செய்தார்,'' என்றார் பெரும்படப்பு தொகுதி பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் அலிமோன்.

Read in English: Muslim family puts faith aside to cremate Hindu orphan who grew up with them

இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment