முஸ்லிம்களுக்கு அரசு வேலை மற்றும் கல்வியில் 4 சதவீத இடஒதுக்கீட்டை காக்க பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டைக் கோர வேண்டும் என்று முதல்வர் கே சந்திரசேகர ராவ் மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரிடம் தெலுங்கானா காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. செப்டம்பர் 13ம் தேதி இந்த வழக்கின் விசாரணை தொடங்க உள்ளது.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தெலுங்கானாவில், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) முஸ்லிம் இடஒதுக்கீடு பிரச்சினையைப் பற்றி பேசுவதில் எச்சரிக்கையாக உள்ளது. ஏனென்றால், பாஜக அதை அரசியல் துருவப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளும் என்று அச்சப்படுக்கிறது. மீண்டும் எழுச்சி பெற்றுள்ள பாஜக, செப்டெம்பர் 17 தெலுங்கானா மாநில விடுதலை தினத்தை நினைவுகூரும் திட்டங்களை அறிவிக்குமாறு, கே.சி.ஆர் அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியுள்ளது.
ஆந்திராவில், பல்வேறு திட்டங்களுக்கு மத்திய நிதியை கோரி வரும் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு, பாஜக தலைமையிலான மத்திய அரசை வருத்தமடையச் செய்துவிடக் கூடாது என்பதற்காக, முஸ்லிம் இட ஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுப்பதில் எச்சரிக்கையாக இருப்பதாகத் தெரிகிறது.
2004-2005-இல் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி தலைமையிலான பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசால் அரசு வேலை மற்றும் கல்வியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பல நபர்களால் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.
மார்ச் 25, 2010-இல் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 4 சதவீத முஸ்லிம் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு தடை விதித்தது,. மேலும் BC-E குழுவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 14 பிரிவுகளுக்கான இடஒதுக்கீடு மறு உத்தரவு மற்றும் பரிந்துரைக்கப்படும் வரை தொடர உத்தரவிட்டது. இந்த விவகாரம் அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியத் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பட், பேலா எம். திரிவேதி மற்றும் ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு செப்டம்பர் 13ஆம் தேதி இடஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்பு ஒப்புதலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பாக (SEBC) ஆந்திரப் பிரதேசத்தில் (தெலுங்கானா உட்பட) முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை மற்றும் பிற முன் விசாரணை நடவடிக்கைகளை முடிப்பதற்கான காலக்கெடுவை அரசியல் சாசன அமர்வு முடிவு செய்துள்ளது.
ராஜசேகர் ரெட்டி அரசு முஸ்லீம் இடஒதுக்கீட்டை அனுமதித்தபோது, இந்த நடவடிக்கைக்கு அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் முழு ஆதரவளித்தது. இருப்பினும், தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ளதோடு, இந்த நடவடிக்கையை எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“மாநில அளவிலும் மத்திய அளவிலும் அரசியல் சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் வேலை மற்றும் கல்வியில் 4% முஸ்லிம் இடஒதுக்கீடு தொடருவதற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என தெலுங்கானா காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான முகமது அலி ஷபீர் கூறினார். சட்ட சபையில். “சுப்ரீம் கோர்ட்டில் 4% முஸ்லிம் இடஒதுக்கீடு வழக்கை பாதுகாக்க பிரதமர் மோடியின் தலையீட்டை மாநிலங்கள் நாட வேண்டும்” என்று அவர் கூறினார்.
மேலும், “டி.ஆர்.எஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசுகள் முஸ்லீம் ஒதுக்கீட்டைத் தொடர்வதற்கு ஆதரவாக இருந்தாலும், பாஜக அதை வெளிப்படையாக எதிர்க்கிறது. உச்ச நீதிமன்றத்தில் 4% முஸ்லீம் இடஒதுக்கீடு தொடர்வதை மத்திய அரசு எதிர்த்தால் அந்த மோசமான நடவடிக்கையை நாங்கள் தடுப்போம்” என்று முகமது அலி ஷபீர் கூறினார்.
முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் அப்போதைய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மறைந்த ஜி.எம்.வாகன்வதி ஆஜரானார். 4% முஸ்லீம் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசு மற்றும் இந்திய அரசு இரண்டும் மோதலில் ஈடுபடாததால், அவர்களால் வலுவான சட்டப் போராட்டத்தை நடத்த முடிந்தது.
ஆனால், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தெலுங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார், “மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பாஜக கடுமையாக எதிர்க்கிறது” என்றும், “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதை ரத்து செய்வோம்” என்றும் நீதிமன்றத்திலும் எதிர்ப்போம் என்று கூறினார். ” என்றார். “முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு எஸ்சி/எஸ்டி மற்றும் ஓ.பி.சி-களுக்கான இடஒதுக்கீட்டைப் பாதிக்கிறது” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
முஸ்லீம் இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதில் ஆர்வம் இருக்கிறதா? இல்லையா என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து கேள்வி எழுப்பியபோதும், முதல்வர் கே.சி.ஆர் மற்றும் அவருடைய டி.ஆர்.எஸ் கட்சி தொடர்ந்து மௌனமாக இருக்கிறது.
ஏப்ரல், 2017-இல், டி.ஆர்.எஸ் கட்சியின் 2014 தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றும் வகையில், தெலுங்கானா சட்டமன்றத்தில், எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 6 முதல் 10 சதவீதமாகவும், முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை 4 முதல் 12 சதவீதமாகவும் உயர்த்துவதற்கான மசோதாவை கே.சி.ஆர் அரசு நிறைவேற்றியது. அந்த மசோதாவை ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பியது. அதற்கு இன்னும் ஒப்புதல் வரவில்லை.
இருப்பினும், கே.சி.ஆர் அரசாங்கம் அந்த மசோதா குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தவில்லை என்றும், எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதங்களுக்குக்கூட பதிலளிக்கவில்லை என்றும் ஷபீர் அலி குற்றம் சாட்டினார்.
2023 டிசம்பரில் தெலுங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முஸ்லீம் இடஒதுக்கீட்டில் எந்த ஒரு நடவடிக்கையும் அரசியல் மந்தநிலையைத் தூண்டும் என்பதற்கான தெளிவான அறிகுறிகளுக்கு மத்தியில், பாஜக டி.ஆர்.எஸ் கட்சியை நெருக்கமாகக் கண்காணித்து வருவதால், இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ளது. “செப்டம்பர் 17 ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் உதயமான தினம் விஷயத்தைப் போலவே தெலுங்கானாவில் முஸ்லீம் இடஒதுக்கீட்டுப் பிரச்சினையையும் பாஜக பயன்படுத்திக் கொள்ளும் என்று டி.ஆர்.எஸ் எச்சரிக்கையாக உள்ளது” என அக்கட்சித் தலைவர் ஒருவர் கூறினார்.
தெலுங்கானா மாநில திட்ட வாரியத்தின் துணைத் தலைவர் பி.வினோத் குமார், முஸ்லிம் ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் சட்ட முயற்சிகளை ஒருங்கிணைக்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். “உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் அதை வாதிப்போம். பிசி நிறுவனங்கள் சார்பில் மூத்த சட்ட ஆலோசகர் ராகேஷ் திவேதி மற்றும் ராஜீவ் தவான் ஆகியோரை நி9யமித்துள்ளோம்” என்று கூறினார்.
ஆந்திரப் பிரதேச சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அம்சேத் பாஷா ஷேக், உச்ச நீதிமன்றத்தில் வாதாட, கபில் சிபல் மற்றும் பிற மூத்த வழக்கறிஞர்களை மாநில அரசு நியமித்துள்ளது என்று கூறினார்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தெலுங்கானாவின் மக்கள்தொகையில் முஸ்லிம்கள் கிட்டத்தட்ட 13 சதவீதமும், ஆந்திரப் பிரதேசத்தின் மக்கள்தொகையில் சுமார் 9 சதவீதமும் உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.