எனது வாழ்க்கை, எனது யோகா’ வீடியோ போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் 21 ஜுன் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தப் போட்டிக்கான வீடியோக்களை அனுப்புவதற்கான கடைசி தேதி 15 ஜுன் 2020 என அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த மே- 31 அன்று மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி, " தனி நபர்களின் வாழ்க்கையில் யோகா-வால் ஏற்படும் மாற்றங்களை சித்தரிக்கும் விதமாகவும், 6-வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களின் ஒரு அம்சமாக திகழும் வகையிலும் எனது வாழ்க்கை, எனது யோகா’ என்ற தலைப்பிலான இந்த வீடியோ போட்டியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஜூன் 21ஆம் தேதி பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் பல்வேறு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ஜூன் 21இல் முக்கியமான நிகழ்வில் அவை நிறைவு பெறும். ஆனால், இந்த ஆண்டு கோவிட்-19 நோய்த் தாக்குதல் காரணமாக இந்த வீடியோ போட்டியை நடத்தத் திட்டமிடப்பட்டது.
என் வாழ்க்கை, எனது யோகா - என்பது சர்வதேச யோகா தினம் 2020க்கான அடிப்படை கோஷமாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
பங்கேற்க விரும்புவர்கள், 3 நிமிடம் ஓடக் கூடிய அளவில் 3 யோகா பயிற்சி (க்ரியா, ஆசனம், பிராணாயாமா, பாந்தா அல்லது முத்ரா) பற்றிய காட்சிகளை வீடியோ குறும்படமாகத் தயாரித்து, தங்களது வாழ்க்கையில் யோகா எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது பற்றிய சிறு குறிப்புடன் அனுப்ப வேண்டும்.
போட்டியில் பங்கேற்பது பற்றிய விரிவான விவரங்கள், ஆயுஷ் அமைச்சகத்தின் ( https://yoga.ayush.gov.in/yoga/) இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ போட்டி, இந்திய அளவிலான போட்டிகள், சர்வதேச அளவிலான இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
வீடியோ காட்சிகளைத் தயாரிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக வந்த கோரிக்கையை அடுத்து, கால நீட்டிப்பு அவகாசம் அறிவிக்கப்பட்டதாகவும், வழங்கப்பட்டுள்ள அவகாசத்தைப் பயன்படுத்தி, அனைவரும், தங்களது வீடியோ காட்சிகளை மேலும் தாமதமின்றி அனுப்பி வைக்குமாறு, மத்திய ஆயுஷ் துறை கேட்டுக்கொண்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.