இரு மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த ஒரே அரசியல்வாதி: என்.டி.திவாரி மரணம்

N D Tiwari Dies at 93 Age, Max hospital, Delhi: டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் என்.டி.திவாரி மரணம் அடைந்தார்.

By: October 18, 2018, 5:33:20 PM

N D Tiwari Dies: என்.டி.திவாரி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93. இந்தியாவில் இரு மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த ஒரே அரசியல்வாதி இவர்தான்!

என்.டி.திவாரி, 1963-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்திரா, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு நெருக்கமானவராக பணியாற்றினார். உத்தரபிரதேசத்திலும், பின்னர் உருவான உத்தரகாண்ட் மாநிலத்திலும் முதல்வர் பதவி வகித்தார். இந்தியாவில் இப்படி இரு மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த ஒரே அரசியல்வாதி இவர்தான்.

93 வயதான திவாரிக்கு கடந்த செப்டம்பர் 20-ம் தேதி உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 26 முதல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். இன்று (அக்டோபர் 18) சிகிச்சை பலனின்றி இறந்தார்.

என்.டி.திவாரி மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். அவரது அரசியல் பணிகளை நினைவு கூர்ந்தனர்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:N d tiwari passed away

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X