நாக்பூர் பல்கலைக்கழகம் எம்.ஏ. வரலாறு படிப்பில், முந்தைய பாடத் திட்டத்தில் இந்திய அரசியல் கட்சிகளின் அத்தியாயத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய பகுதியை நீக்கிவிட்டு பா.ஜ.க மற்றும் ஜன சங்கம் சேர்க்கப்பட்ட நகர்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூர் பல்கலைக்கழகம் எம்.ஏ. வரலாறு படிக்கும் மாணவர்களுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டம் பா.ஜ.க-வின் தோற்றம் மற்றும் இயக்கம் பற்றி மாணவர்களுக்கு கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியான தி.மு.க-வின் அத்தியாயம் இடம் பெற்றிருந்த நிலையில், அதை நீக்கிவிட்டு பா.ஜ.க-வை ஆதரிக்கும் அ.தி.மு.க-வின் பகுதியாக பல்கலைக்கழகம் மாற்றியுள்ளது. அதே போல, காலிஸ்தான் இயக்கத்தை உள்ளடக்கிய ஒரு அத்தியாயம் தவிர்க்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறியபடி, இந்தியாவின் சமூக-அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய ராம ஜென்மபூமி இயக்கத்தை மையமாகக் கொண்டு, 1980-2000 முதல் இந்திய வெகுஜன இயக்கங்கள்" என்ற தலைப்பில் ஒரு புதிய அத்தியாயம் இணைக்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டில், நாக்பூரை தலைமையகத்தைக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் பற்றிய ஒரு அத்தியாயத்தை அதன் பி.ஏ. வரலாறு நான்காம் செமஸ்டர் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியபோது பல்கலைக்கழகம் இதேபோன்ற சர்ச்சையை எதிர்கொண்டது.
பா.ஜ.க-வின் முன்னோடியான ஜனசங்கம் ஏற்கனவே பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், புதிய பாடத்திட்டத்தை உருவாக்கிய நாக்பூர் பல்கலைக்கழக வாரியத்தின் வரலாற்றுத் தலைவர் ஷியாம் கொரெட்டியின் கருத்துப்படி, பிந்தையதைச் சேர்ப்பது பொருத்தமானதாகத் தோன்றியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இனி தேசிய கட்சியாக இல்லாததால் அதை நீக்கிவிட்டு, தேசிய அளவில் காலூன்றினாலும் பழைய பாடத்திட்டத்தில் இல்லாத பா.ஜ.க-வை சேர்த்தோம். நாங்கள் 2010 வரை பா.ஜ.க-வின் வரலாற்றை மட்டுமே சேர்த்துள்ளோம். மாணவர்களுக்கு தவறான விஷயங்களைக் கற்பிக்க முடியாது” என்று கொரெட்டி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“