தேர்தல் நேரத்தில் நமோ டி.வி தொடங்கப்பட்டிருப்பதால், ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்துள்ளனர்.
இதைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.
நமோ டி.வி-யும் அதன் சர்ச்சைகளும்
இந்த டி.வி தேசிய அளவில் அனைத்து DTH தளங்களிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் ஓவ்வொரு நிகழ்ச்சியும் இதில் லைவாக ஒளிபரப்பப்படும்.
”தேர்தல் நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்திய பின்னர், சொந்த டிவி சேனலை தொடங்குவதற்கு ஒரு கட்சிக்கு எப்படி ஒப்புதல் வழங்கப்பட்டது” என தேர்தல் ஆணையத்தில் கேள்வி எழுப்பியது ஆம் ஆத்மி கட்சி.
தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையினரிடமிருந்து முறையான அனுமதி கிடைத்ததா என காங்கிரஸ் கட்சி வினவி வருகிறது.
சேனல் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது?
நமோ டி.வி ஒரு ப்ளாட் ஃபார்ம் சர்வீஸ் போன்றது. இம்மாதிரியான சேவைகளுக்கு தங்களது அனுமதி தேவையில்லை என தகவல் & ஒளிபரப்புத்துறை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.
ப்ளாட் ஃபார்ம் சர்வீஸா?
ஒரு குறிப்பிட்ட சேனலை தங்களது டி.வி-யில் பார்க்க நிறைய வழிகள் உள்ளன. கேபிள் டி.வி, உள்ளூர் கேபிள் டி.வி ஆபரேட்டர், டி.டி.ஹெச் போன்ற பலதரப்பட்ட வழிகளில் குறிப்பிட்ட சேனல் ஒளிபரப்பப்படுவது, டி.பி.ஓ அதாவது டிஸ்ட்ரிபியூட்டர் ப்ளாட்ஃபார்ம் ஆபரேட்டர் எனப்படும்.
செயற்கைகோள்கள் மூலமாக ஒளிபரப்பக்கூடிய தனியார் சேனல்களுக்கு தகவல் & ஒளிபரப்புத்துறை அனுமதி தேவைப்படுகின்றன.
இந்நிலையில், பிளாட்ஃபார்ம் சேவைகள் என்பது உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் டி.டி.ஹெச் ஆபரேட்டர்களால் தனிப்பட்ட பார்வையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சில சேனல்களாகும்.
இந்த சேவையில் வேறென்ன உள்ளது?
உள்ளூர் செய்திகள் உள்ளிட்ட விஷயங்களை லோக்கல் கேபிள் ஆபரேட்டர்கள் இதில் வழங்குவார்கள். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப வீடியோ, திரைப்படம் போன்றவைகள் ஒளிபரப்பப்படும்.
நமோ டி.வி-யின் ப்ளாட் ஃபார்ம் சர்வீஸ்
ப்ளாட் ஃபார்ம் சர்வீஸில் சில பிரத்யேகமான சேவைகள் உள்ளன. கடந்த 2006 மற்றும் 2014-ல் இத்தகைய சேவைகளுக்கான சிறப்பு விதிமுறைகளை எதிர்த்து ட்ராயிடம் ஆலோசிக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டில் TRAI இந்த சேவைகளுக்கான சிறப்பு ஒழுங்குமுறைகளை பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையில், டிராய் நிறுவனம், சேவை மற்றும் அதன் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் நிறுவனங்களின் பெயரையும் சேர்த்து, தகவல் & ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியது.
மற்ற நெட்வொர்க்குகளுடன் ப்ளாட் ஃபார்ம் சேவைகளைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது (நமோ டிவி பல நெட்வொர்க்குகளில் இயங்குகிறது) எனவும் ட்ராய் தெரிவித்தது.
இருப்பினும் ப்ளாட் ஃபார்ம் சேவைகளுக்கான சட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.