புதுச்சேரி துணைநிலை ஆளுநரை விமர்சித்த விவகாரம் : கைது ஆகிறார் நாஞ்சில் சம்பத்
2019ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை விமர்சித்த விவகாரம் தொடர்பாக, புதுச்சேரி போலீசார் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
2019ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை விமர்சித்த விவகாரம் தொடர்பாக, புதுச்சேரி போலீசார் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மதிமுக, அதிமுக, அமமுக, திமுக என தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்திலும் இணைந்து சேவை செய்து வந்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், இப்போதைக்கு திமுகவில் உள்ளார்.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது அந்த தேர்தல் பிரசாரத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரை நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சனம் செய்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் புதுச்சேரி போலீசார் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாகர்கோவில் அருகே உள்ள இல்லத்தில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுவை போலீசார் முயற்சித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் நாஞ்சில் சம்பத் கைதாக மறுப்பதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil