இஸ்ரோவின் தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக வி. நாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த வி.நாராயணன் தற்போது இஸ்ரோவின் Liquid Propulsion Systems மையத்தின் இயக்குனராக உள்ள நிலையில் வரும் 14 ஆம் தேதி இஸ்ரோவின் புதிய தலைவராக பதவியேற்க உள்ளார்.
இவர் இஸ்ரோவின் 11வது தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் இவரது பதிவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
கன்னியாகுமரி மாவட்டம் மேலக்காட்டுவிளை கிராமத்தைச் சேர்ந்த வி.நாராயணன் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 1984 யில் இஸ்ரோவில் இணைந்த வி.நாராயணன் 40 ஆண்டுகளில் பல்வேறு பொறுப்புகளை வகிக்கிறார்.
இது தொடர்பாக பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருவனந்தபுரம், வல்லியமாலாவில் உள்ள திரவ உந்துவியல் மையத்தின் இயக்குநராக உள்ளார். பி.எஸ்.எல்.வி சி57 சூரிய ஆய்வுக்கான ஆதித்யா ஜிஎஸெல்வி எம்.கே 3, சண்நிராயன் 2,3 திட்டங்களில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உள்ளது.
183 திரவ உந்துவிசை திட்டம், கட்டுப்பாடு அமைப்புகளை வி.நாராயணன் தலைமையிலான குழு இஸ்ரோவுக்கு வழங்கியுள்ளது. ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை அமைப்புகளில் வி.நாராயணன் நிபுணத்துவம் பெற்றவர்.
இதுகுறித்து வி.நாராயணன் அளித்துள்ள பேட்டியில், "முக்கியமான பொறுப்பை பிரதமர் கொடுத்து இருக்கிறார். மிக மிக முக்கியமான பொறுப்பு என நான் நினைக்கிறேன். இஸ்ரோவிற்கு அடுத்ததாக முக்கியமான சில திட்டங்கள் உள்ளன. இஸ்ரோ பணி என்பது தனிப்பட்ட பணி அல்ல. அனைவருடைய கூட்டுப் பணி” ஆகும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“