puducherry | narayanasamy | புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய நாராயணசாமி, “காலாப்பட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை விரிவாக்கம் செய்ய கடந்த காங்கிரஸ் அரசு அனுமதி அளிக்கவில்லை.
தற்போது, தொழிற்சாலை நிர்வாகமும், ஆளும் அரசும் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறது. மேலும் தீ-விபத்தை அரசு மூடி மறைக்க பார்க்கிறது.
தீ-விபத்து குறித்து துணை நிலை ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிடும் நிலையில் துறையின் அமைச்சர் மற்றும் முதல்வர் காணாமல் போய்விட்டனர். சூப்பர் முதல்வராக தமிழிசை செயல்படுகிறார்” என்றார்.
மேலும், 95% விதிகளை மீறி தொழிற்சாலை செயல்படுவதால் உடனடியாக அரசு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினார்கள்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“