மக்களைப் பற்றி கவலைப்படாமல் முதலமைச்சர், அமைச்சர், மற்றும் அதிகாரிகள் என அனைவரும் ஊழல் செய்து வருவதாக புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி மங்கலம் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல் வீரர்கள் கூட்டம் கோட்டைமேடு பகுதியில் நடைபெற்றது. மங்களம் தொகுதி பொறுப்பாளரும், மாநில செயலாளருமான ரகுபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், மற்றும் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், "புதுச்சேரியில் ஒரு ஊழல் மிகுந்த ஆட்சி நடைபெறுகிறது. இங்கு முதலமைச்சர், அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் ஊழல் செய்கிறார்கள். இவர்களுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. ஆட்சியாளர்கள் லஞ்சம் பெற்று வருகிரறார்கள்" என்று கடுமையாக விமர்சித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.