அமைச்சர் சந்திர பிரியங்கா புகார் குறித்து, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
மாநில அந்தஸ்து விவகாரத்தில் எதிர்கட்சிகள் மீது முதல்வர் ரங்கசாமி பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்து வருகிறார் என்றும்,சந்திர பிரியங்காவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், திருமுருகனை அமைச்சராக்க வேண்டும் என 4 நாட்களுக்கு முன்பு துணைநிலை ஆளுநரை சந்தித்து முதல்வர் கடிதம் கொடுத்துள்ளார், அதை கேள்விப்பட்டு தான் சந்திர பிரியங்கா தாமாக முன்வந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என கூறினார்.
அடுத்து காங்கிரஸ் ஆட்சி வந்தால் ரைடு நடத்தி விடுவார்கள் என்பதால் துபாய், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று கள்ளப்பனத்தை பதுக்கி வைக்கும் வேலையை அமைச்சர் ஒருவர் செய்து வருகிறார் என்றும்முதலில் டிஸ்மிஸ் செய்ய வேண்டியது முதல்வர் மற்றும் அமைச்சர்களை தான் ஏன் என்றால் அவர்கள் செயல்படவே இல்லை என குற்றம் சாட்டினார்.
சந்திர பிரியங்கா ராஜினாமா செய்த விவகாரத்தில் முதல்வர் ஏன் வாய் மூடி மவுனமாக உள்ளார் என கேள்வி எழுப்பிய நாராயணசாமி, பெண் உரிமை குறித்து வாய் கிழிய பேசும் துணைநிலை ஆளுநர் பொட்டிப்பாம்பாக தற்போது உள்ளார் என்றார்.
மேலும்,தலித் பெண் அமைச்சர் புகார் கூறிய நிலையில் முதல்வர் ரங்கசாமி மீது வன்கொடுமை சட்டத்தின் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“