Advertisment

மீனவர்களின் வாழ்விடங்களை மத்திய அரசு கபளீகரம் செய்கிறது: நாராயணசாமி புகார்

புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மீனவர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Puducherry congress, Puducherry, former Puducherry CM Narayanasamy, மீனவர்களின் வாழ்விடங்களை மத்திய அரசு கபளீகரம் செய்கிறது, நாராயணசாமி புகார், Narayanasamy says centre occupying fishermen residents

புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மீனவர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மீனவர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Advertisment

ஆர்ப்பாட்டத்துக்கு மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள் காங்கேயன், பாஸ்கர் தலைமை வகித்தனர். மாநிலகாங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எம்பி வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மீனவர்கள் வாழும் இடத்தையும், வாழ்வாதாரத்தையும் கைப்பற்ற நினைக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் நாராயணசாமி பேசியதாவது:

2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் அறிக்கையில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என வாக்குறுதி அளித்தோம். ஆனால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. ஆட்சிக்கு வந்த பாஜக தனி அமைச்சகம் அமைத்தது. ஆனால் தனி அமைச்சர் நியமிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் மீனவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்தோம். ஆனால் மத்திய, மாநில பாஜக அரசுகள் மீனவர்களை புறக்கணித்து வருகிறது.

கடலில் இருந்து 500 மீட்டர் வரையிலான பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக நாங்கள் அறிவித்தோம். இப்போது அதை 50 மீட்டராக மத்திய அரசு குறைத்துள்ளது. மீனவர்களின் வாழ்விடங்களை சுற்றுலா என்ற பெயரில் மத்திய அரசு கபளீகரம் செய்து வருகிறது. புதுவையில் மீனவர்களுக்கு சொந்தமான கோவில் நில அபகரிப்புக்கு எம்எல்ஏக்களே ஆதரவாக உள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சியில் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவி வழங்கினோம். ஆனால் அவர் காங்கிரசுக்கு துரோகம் செய்துவிட்டு கட்சியிலிருந்து வெளியேறினார். நடுத்தெருவில் நிற்பார்கள் என ஏற்கனவே சொல்லியுள்ளேன். மல்லாடிகிருஷ்ணாராவ் ஏனாமில் முதலமைச்சரை போட்டியிட செய்து தோல்வியடைய வைத்தார்.

அன்று நான் சொன்னதுபோல காங்கிரசிலிருந்து வெளியேறிய ஒரு சிலரை தவிர மற்றவர்கள் நடுரோட்டில்தான் நிற்கின்றனர். சுய நலத்துக்காகவும், பதவிக்காகவும் உங்கள் சமுதாயத்தை தேடி சிலர் வருவார்கள். அவர்களை அடையாளம் கண்டு ஒதுகக்குங்கள்.” இவ்வாறு அவர் பேசினார்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Puducherry Puducherry Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment