/indian-express-tamil/media/media_files/uFK3aFlbafO25nufvKDN.jpeg)
“இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றும் சமாதானம் பேச இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்தாரா என்பதை குறித்து பிரதமர் விளக்க வேண்டும்” என்று நாராயணசாமி கூறினார்.
பா.ஜ.க-வை எதிர்த்து தேர்தலை சந்திக்க என்.ஆர். காங்கிரசுக்கு முதுகெலும்பு இல்லை என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, ரங்கசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றும் சமாதானம் பேச இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்தாரா என்பதை குறித்து பிரதமர் விளக்க வேண்டும்” என்றார்.
மேலும், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பும் போது அவர்களுக்கு இலங்கை அரசு பாதுகாப்பு அளிக்காதது கண்டிக்கத்தக்கது, அவர்களுக்கு இலங்கை அரசு வாழ்வாதாரத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும் இதனை இந்திய அரசு உற்று கவனிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
விமானத்தில் செல்ல பழக்கம் இல்லாததால் நிதி ஆயோக் கூட்டத்தில் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை என வலியுறுத்தினார்.
விமானத்தில் செல்ல பழக்கம் இல்லாததால் நிதி ஆயோக் கூட்டத்தில் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை என்று சபாநாயகர் செல்வம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது விமானத்தில் செல்ல ரங்கசாமிக்கு பயமாக இருந்தால் அவர் ரயில் பயணம் செய்து கூட்டத்தில் கலந்து கொண்டு புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதி ஆதாரங்கள் குறித்து பேசி இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.
சாமி கும்பிடுவதற்காக நிதி ஆயோக் கூட்டத்தை ரங்கசாமி புறக்கணித்தார் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது, என்று குறிப்பிட்ட நாராயணசாமி கோமாளிகள் ஆட்சி நடத்தினால் இப்படித்தான் இருக்கும் என்று விமர்சித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டு மாநில அந்தஸ்து பெறாமல் புதுச்சேரி மக்களை ரங்கசாமி ஏமாற்றி வருகிறார் என்று குற்றம் சாட்டிய நாராயணசாமி, இதற்காக அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார்.
தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக குறிப்பிடும் ரங்கசாமி, பா.ஜ.க-வை விட்டு வெளியேறினால் அவர் கட்சி சுக்கு நூறாக உடைந்து விடும் காணாமல் போய்விடும் என்று விமர்சனம் செய்த நாராயணசாமி பா.ஜ.க-வை எதிர்த்து தேர்தலை சந்திக்க என்.ஆர். காங்கிரசுக்கு முதுகெலும்பு இல்லை யென்றார்.
புதுச்சேரியில் புதிய சட்டமன்றம் கட்டுவது தேவையில்லாத செலவு உள்நோக்கத்துடன் சபாநாயகர் கோப்புகளை அனுப்பி நிறைவேறாத காரணத்தினால் தலைமை செயலரை குறை கூறுவது என்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.