இந்தியாவில் மூன்று கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளில் பல்வேறு கட்டங்களில் உள்ளன. சில வாரங்களில் கோவிட்-19 தடுப்பூசி தயாராக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கோவிட்-19 நிலைமை குறித்து தடுப்பூசி சவால்கள் மற்றும் செல்லும் வழி குறித்து அனைத்து கட்சிதலைவர்களுடனான காணொளி வழியிலான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தடுப்பூசியின் விலை மற்றும் விநியோகம் குறித்து மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. ஏனெனில், அவர் பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கிறேன் என்று வலியுறுத்தினார். தடுப்பூசி பெறும் முதல் நபர்களாக கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள் மற்றும் கடுமையான நோய்கள் உள்ள முதியவர்கள் இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு, அகமதாபாத், ஐதராபாத் மற்றும் புனேவில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையங்களில் தடுப்பூசி உருவாக்கப்படுவதை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். மேலும், அவர் திங்கள்கிழமை மூன்று மருந்து நிறுவனங்களுடன் ஒரு காணொளி வழியிலான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அந்த நிறுவனங்களின் கோவிட்-19 க்கான தடுப்பூசி விண்ணப்பதாரர்கள் தற்போது மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”