scorecardresearch

மோடி முதல் தேபஸ்ரீ வரை: 58 அமைச்சர்கள் பட்டியல், இலாகாக்கள்

New cabinet minister of india 2019: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவி ஏற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

narendra modi, cabinet ministers of india 2019, modi, பிரதமர் நரேந்திர மோடி

Narendra Modi And Cabinet Ministers Of India 2019: 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மாபெரும் வெற்றி பெற்றது.இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 58 பேர் கொண்ட அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது. அதன் முழு விவரம் இங்கு தரப்படுகிறது. அமைச்சர்களின் இலாகாக்கள் இன்று அறிவிக்கப்பட்டன. அதன் விவரம் தரப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவி ஏற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடி மற்றும் 57 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களின் முழுப் பட்டியல் வருமாறு.

Ministers Of India 2019: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை

பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ அமைச்சரவை: பதவி ஏற்றவர்கள் பட்டியல்

1. பிரதமர் நரேந்திர மோடி- பிரதமர்- அணுசக்தி, விண்வெளி, கொள்கை சார்ந்த விஷயங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம்

கேபினட் அமைச்சர்கள்:

2. ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத் துறை
3. அமித் ஷா- உள்துறை
4. நிதின் கட்கரி- சாலை போக்குவரத்து துறை
5. சதானந்த கவுடா- ரசாயனம் மற்றும் உரம்
6. நிர்மலா சீதாராமன்- நிதித்துறை
7. ராம்விலாஸ் பஸ்வான்- உணவுத் துறை
8. நரேந்திரசிங் தோமர்- விவசாயத்துறை
9. ரவிசங்கர் பிரசாத்- சட்டம்
10. ஹர்சிம்ரத் பாதல் (அகாலி தளம்)- உணவு பதப்படுத்தும் தொழில்
11. தாவர்சந்த் கெலோட்-  சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்
12. ஜெய்சங்கர் (முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர்)- வெளியுறவுத் துறை
13. ரமேஷ் பொக்ரியால்- மனிதவள மேம்பாட்டுத்துறை
14. அர்ஜூன் முன்டா-  பழங்குடியினர் நலத்துறை
15. ஸ்மிரிதி இரானி- பெண்கள் மற்றும் நலத்துறை
16. ஹர்ஷவர்தன்-  சுகாதாரத்துறை, அறிவியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
17. பிரகாஷ் ஜவடேகர்-  சுற்றுச் சூழல், வனம், தகவல் ஒளிபரப்பு துறை
18. பியூஷ் கோயல்-  ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் துறை
19. தர்மேந்திர பிரதான்-  பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
20. முக்தார் அப்பாஸ் நக்வி- சிறுபான்மையினர் நலத்துறை
21. பிரகலாத் ஜோஷி- நாடாளுமன்ற விவகாரத்துறை, நிலக்கரி, சுரங்கம் துறை
22. மகேந்திரநாத் பாண்டே- திறன் மேம்பாட்டு துறை
23. அரவிந்த் சாவந்த்-  கனரக தொழில்
24. கிரிராஜ் சிங்-  கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளத்துறை
25. கஜேந்திரசிங் ஜெகாவத்- ஜெய் சக்தி  துறை

தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள்:

26. சந்தோஷ்குமார் கங்வால்-  தொழிலாளர், வேலைவாய்ப்பு
27. இந்திரஜித் சிங்-  புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம்
28. ஸ்ரீபத் நாயக்- ஆயுர்வேதா, யோகா, சித்தா, ஹோமியோபதி
29. ஜிதேந்திர சிங்- வடகிழக்கு மாநில மேம்பாடு, பிரதமர் அலுவலகம், விண்வெளித்துறை
30. கிரன் ரிஜிஜு-  இளைஞர் நலன், விளையாட்டு, சிறுபான்மையினர் நலன்
31. பிரகலாத் சிங் படேல்-  கலாச்சாரம், சுற்றுலா
32. ராஜ்குமார் சிங்-  எரிசக்தி, புதுப்பிக்கவல்ல எரிசக்தி, திறன் மேம்பாடு
33. ஹர்தீப்சிங் பூரி- வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, விமான போக்குவரத்து
34. மன்சூக் மண்டோலியா-  கப்பல் போக்குவரத்து, ரசாயனம், உரம்

இணை அமைச்சர்கள்:

35. பஹன் சிங் குலஸ்தே-  எஃகு  துறை
36. அஸ்வினி குமார் சவுபே- சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்
37. அர்ஜூன்ராம் மெக்வால்-  நாடாளுமன்ற விவகாரம், கனரக தொழில், பொது நிறுவனங்கள்
38. வி.கே.சிங்-  சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை<br />39. கிரிஷன் பால் குர்ஜார்- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
40. டான்வே ராசாஹேப் தாதாராவ்- நுகர்வோர், உணவு, பொது வினியோகம்
41. கிஷன் ரெட்டி- உள்துறை
42. பர்ஷோத்தம் ரூபாலா- விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன்
43. ராம்தாஸ் அத்வாலே- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
44. சாத்வி நிரஞ்சன் சோதி- ஊரக மேம்பாடு
45. பாபுல் சுப்ரியோ- சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம்
46. சஞ்சீவ் பால்யன்- கால்நடைத்துறை, பால், மீன்வளம்
47. சஞ்சய் சாம்ராவ் தோத்ரே- மனிதவள மேம்பாடு, தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்
48. அனுராக்சிங் தாகூர்- நிதி, கம்பெனிகள் விவகாரம்
49. அங்காடி சுரேஷ் சன்னபாசப்பா- ரயில்வே
50. நித்யானந்த் ராய்- உள்துறை
51. ரத்தன்லால் கட்டாரியா- ஜெய் சக்தி அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
52. முரளிதரன்- வெளி விவகாரம், நாடாளுமன்ற விவகாரம்
53. ரேணுகா சிங்- பழங்குடியினர் விவகாரம்
54. சோம் பர்காஷ்- வர்த்தகம் மற்றும் தொழில்
55. ராமேஷ்வர் டெலி- உணவு பதப்படுத்தும் தொழில்
56. பிரதாப் சந்திர சாங்கி- சிறு, குறு, நடுத்தர தொழில், கால்நடை, மீன், பால்வளத்துறை
57. கைலாஷ் சவுத்ரி- விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன்
58. தேபஸ்ரீ சவுத்ரி- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு

மேற்கண்ட அனைவருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  நேற்று (மே 30) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இலாகாக்கள் இன்று அறிவிக்கப்பட்டன.

 

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Narendra modi and cabinet ministers of india

Best of Express