PM Modi pens poem after Mamallapuram visit : மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, கடல் உடனான உரையாடலில், தன்னையே தான் தொலைத்துவிட்டதாக பிரதமர் மோடி, கவிதை வாயிலாக தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, கடல் உடனான உரையாடலில், தன்னையே தான் தொலைத்துவிட்டதாக பிரதமர் மோடி, கவிதை வாயிலாக தெரிவித்துள்ளார்.
Advertisment
कल महाबलीपुरम में सवेरे तट पर टहलते-टहलते सागर से संवाद करने में खो गया।
இந்திய – சீனா நாடுகளின் தலைவர்களின் முறைசாரா சந்திப்பு மாநாடு, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 11மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற்றது.முதல்நாள் நிகழ்ச்சிக்கு பிறகு, 12ம் தேதி காலைநேரத்தில் பிரதமர் மோடி தான் தங்கியிருந்த ரெசார்ட் அருகே உள்ள பீச் பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு கிடந்த குப்பைகளை அகறறினார். பிரதமர் மோடி, குப்பைகளை அகற்றிய வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
Advertisment
Advertisements
30 நிமிடங்கள், மோடி கடற்கரை பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு கண்ட குப்பைகளை தானே பொறுக்கி அந்த இடத்தை சுத்தப்படுத்தியதோடு மட்டுமல்லாது, சுத்தம் குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தினார். இதுதொடர்பாக, 3 நிமிடங்கள் கால அளவிலான வீடியோவை, அவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோவுக்கு, பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். கவுன்சிலர் கூட செய்ய தயங்கும் வேலையை, நாட்டின் பிரதமர் தயங்காமல் செய்துவிட்டதாக பலரும் பாராட்டினர்.
இந்நிலையில், தனது மாமல்லபுரம் விஜயத்தால் கிடைத்த அனுபவங்களை, பிரதமர் மோடி, இந்தியில் கவிதையாக வடித்துள்ளார். அந்த கவிதையை, அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, மாமல்லபுரம் கடற்கரையில் நான் நடைப்பயிற்சி மேற்கொண்டபோதே கடல் உடன் உரையாடிக்கொண்டே இருந்தேன். அப்போது கடல், தனக்கும் சூரியன், அலைகள், மற்றும் அதன் வலிகளுக்கு இடையேயான தொடர்பை விளக்கியது. இந்த உரையாடல், எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த உணர்வை, இங்கு கவிதையாக வடித்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.