பிரதமர் மோடியிடம் கார் கூட கிடையாது! – பிரதமர் அலுவலகம்

மோடியிடம் வரிசேமிப்பு எல்அன்ட்டி பத்திரம் ரூ.20 ஆயிரம், தேசிய சேமிப்பு பத்திரம் ரூ.5.18 லட்சம், எல்ஐசி காப்பீடு ரூ.1.59 லட்சம் ஆகியவை இருக்கின்றன. மோடியிடம் சொந்தமாக 4 தங்க மோதிரங்கள் உள்ளன

By: September 18, 2018, 6:50:25 PM

பிரதமர் மோடிக்கு ரூ.2 கோடிக்கு சொத்துக்கள் இருந்தும், சொந்தமாக கார் இல்லை என்று பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆண்டுதோறும் தங்களின் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் பிரதமர் மோடியின் சொத்துக்கள் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை குறித்து பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “பிரதமர் மோடியிடம் ரூ. 48 ஆயிரத்து 944 ரொக்கமாகக் கையிருப்பு இருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது பிரதமர் மோடியின் கையிருப்பு பணம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.1.49 லட்சம் இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ரூ.11 லட்சத்து 29 ஆயிரத்து 690 டெபாசிட் செய்துள்ளார். மற்றொரு எஸ்பிஐ வங்கிக்கணக்கில் ரூ.1.7 கோடிக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

மோடியிடம் வரிசேமிப்பு எல்அன்ட்டி பத்திரம் ரூ.20 ஆயிரம், தேசிய சேமிப்பு பத்திரம் ரூ.5.18 லட்சம், எல்ஐசி காப்பீடு ரூ.1.59 லட்சம் ஆகியவை இருக்கின்றன. மோடியிடம் சொந்தமாக 4 தங்க மோதிரங்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.1.38 லட்சமாகும். மோடிக்குச் சொந்தமாக பைக், கார் போன்ற வாகனங்கள் ஏதுமில்லை. குஜராத் மாநிலம் காந்திநகரில் கடந்த 2002-ம் ஆண்டு மோடி ரூ.1.30லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளார். அதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.1.கோடியாகும். மற்றவகையில் பரம்பரை சொத்துக்கள் ஏதும் மோடிக்கு இல்லை” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Narendra modi crorepati pm who does not own a car

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X