Advertisment

தெற்கில் மோடியின் தேர்தல் அழுத்தம்: கேரளாவில் தாமரை மலரும்... தி.மு.க - காங். கூட்டணியை விமர்சித்த மோடி

கேரள மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் எந்த தவறும் ஏற்படாது என்று பிரதமர் மோடி உறுதியளித்தார் - இது மோடியின் உத்தரவாதம் என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
Modi welcomes

கன்னியாகுமரியில், மார்ச் 15, 2024, வெள்ளிக்கிழமை மோடி தேர்தல் பிரச்சாரம்; கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவிக்கப்பட்டது. (பி.டி.ஐ புகைப்படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கேரளா மற்றும் தமிழ்நாடு தேர்தல் பிரசாரங்களில் வெள்ளிக்கிழமை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தற்போது இரண்டு தென் மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சிகளை விமர்சித்துப் பேசினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Modi’s poll push in South: PM says lotus will bloom in Kerala, targets DMK-Cong alliance in Tamil Nadu

கேரளாவில் என்.டி.ஏ-வின் தேர்தல் பிரச்சாரத்தை பத்தனம்திட்டாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி,  “கேரளாவில் இந்த முறை தாமரை மலரப் போகிறது” என்று கூறினார். பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனியை பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கேரளாவில் ஆளும் சி.பி.ஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் மீது கடுமையான தாக்குதலை தொடுத்தார். “எல்.டி.எஃப் மற்றும் யூ.டி.எஃப் ஆகிய இரண்டும் ரப்பர் விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடி பற்றி அறியாமையைக் காட்டுகின்றன. கேரளாவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. வளாகங்கள் கம்யூனிஸ்ட் குண்டர்களின் கூடாரமாக மாறிவிட்டன. கேரளாவில் உள்ள சர்ச் பாதிரியார்கள்கூட வன்முறையில் இருந்து பாதுகாப்பாக இல்லை. எல்.டி.எஃப் மற்றும் யூ.டி.எஃப் மாறி மாறி ஆட்சி செய்வது நின்றால் மட்டுமே இந்த நிலை மாறும்” என்று பிரதமர் மோடி கூறினார்

கேரளாவில் பா.ஜ.க-வின் வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, “கடந்த தேர்தல்களில் கேரள மக்கள் எங்களுக்கு இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை அளித்துள்ளனர். இந்த முறை இரட்டை இலக்க இருக்கைகள் வெகு தொலைவில் இல்லை. இந்த முறை கேரளாவில் தாமரை மலரப்போகிறது” என்று கூறினார்.

கேரள மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் எந்த தவறும் ஏற்படாது என்று பிரதமர் மோடி உறுதியளித்தார் -  “இது மோடியின் உத்தரவாதம்” என்று கூறினார். 

தேசிய அளவில் சி.பி.ஐ (எம்) மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் உள்ளடக்கிய இண்டியா கூட்டணியை பிரதமர் மோடி விமர்சித்தார். “கேரளாவில் சண்டை போடுவது போல் நடிக்கிறார்கள், ஆனால், டெல்லியில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இதை கேரள மக்கள் உணர்ந்துள்ளனர்” என்று கூறினார். 

பத்தனம்திட்டா தொகுதியில் இருந்து வெளிநாட்டிட்டில் வசிப்பவர்களின் கணிசமான எண்ணிக்கையைத் தாக்கும் முயற்சியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம், கோவிட் -19-ன் போது வெளிநாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை தனது அரசாங்கம் திருப்பி அனுப்பியது, ஈராக்கில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய செவிலியர்களை விடுவித்தது ஆகியவற்றை மோடி நினைவு கூர்ந்தார். மேலும், “ஏமனில் தீவிரவாதிகளின் காவலில் வைக்கப்பட்டிருந்த பாதிரியார் விடுவிக்கப்பட்டார். எப்போது, ​​எங்கே ஒரு இந்தியர் எந்த சிரமத்தில் இருந்தாலும், அரசாங்கம் அவர்களுக்கு ஆதரவாக உறுதியாக நிற்கும்” என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் கே. சுரேந்திரன், வி. முரளீதரன் மற்றும் மத்திய கேரளாவில் உள்ள பல்வேறு தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் வெள்ளிக்கிழமை, தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை புறக்கணிக்க வேண்டும் என்று விமர்சித்த மோடி, மாநிலத்தில் முன்னேற்றம் மற்றும் கலாச்சார பாதுகாப்பின் முன்னோடியாக பா.ஜ.க.வை நிலைநிறுத்தினார்.

“தி.மு.க மற்றும் காங்கிரஸ் இரண்டும் தமிழ்நாட்டின் காலத்தால் அழியாத மரபுகள் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானவை” என்று குற்றம் சாட்டிய மோடி, - பாரம்பரிய காளைகளை அடக்கும் நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு மீதான தடையை ஆதரிப்பதாக அக்கட்சிகளை விமர்சித்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்தியது உள்ளிட்ட உள்ளூர் பழக்கவழக்கங்களை நிலைநிறுத்துவதே பா.ஜ.க-வின் முயற்சி என்று பிரதமர் மோடி கூறினார்.

முன்னாள் பிரதமர் ஏபி வாஜ்பாய் அவர்களால் தொடங்கப்பட்ட தங்க நாற்கர சாலைத் திட்டத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இது உள்கட்டமைப்புக்கான பா.ஜ.க.வின் அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டு, முந்தைய அரசாங்கங்கள் இட்திட்டத்தில் தாமதம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.

கன்னியாகுமரி - நரிகுளம் பாலம், பார்வதிபுரம் - மார்த்தாண்டம் பாலம் போன்ற நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட திட்டப்பணிகள் தனது ஆட்சிக் காலத்தில் நிறைவடைந்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதை மேற்கோள் காட்டி, தமிழகத்தின் உள்கட்டமைப்பில் மத்திய அரசின் விரிவான முதலீட்டையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடல்சார் வளர்ச்சியின் உத்தி முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் மோடி பேசினார். தூத்துக்குடி வெளி துறைமுக கொள்கலன் முனையம், உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துதல் மற்றும் மீனவ சமுதாயத்தை மேம்படுத்துதல் போன்ற துறைமுகம் தலைமையிலான முயற்சிகளில் மத்திய அரசின் கவனம் செலுத்தப்படுவதாக கூறினார்.

இலங்கை கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் அவல நிலையை அவர் எடுத்துரைத்தார். அவரது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே, ராஜதந்திர வழிகள் மூலம் நிலைமை சரி செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

PM Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment