கேரளாவின் பாலக்காட்டில் செவ்வாய்கிழமை, வாகனப் பேரணி மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த ஆண்டில் பிரதமரின் ஐந்தாவது கேரளா பயணம் இதுவாகும்.
ஹெலிகாப்டர் வழியாக பாலக்காடு சென்றடைந்த மோடி, பாஜக தொண்டர்கள் திரண்டிருந்த, தடுப்புகள் அமைக்கப்பட்ட சாலை வழியாக அரை மணி நேரம் பேரணியை நடத்தினார். அவருடன் கட்சி வேட்பாளர்கள் சி.கிருஷ்ணகுமார் (பாலக்காடு), நிவேதிதா சுப்ரமணியன் (பொன்னானி) மற்றும் பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
எவ்வாறாயினும், நிகழ்வின் போது " தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) முஸ்லிம் வேட்பாளரை ஓரங்கட்டியதாக" பாஜக மீது ஆளும் ஆளும் இடது ஜனநாயக முன்னணி குற்றம் சாட்டியதன் மூலம் இந்த சாலைப் பேரணி ஒரு சர்ச்சையில் சிக்கியது.
பாஜகவின் மலப்புரம் வேட்பாளர் எம்.அப்துல் சலாம் இல்லாததை சுட்டிக்காட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஏ.கே.பாலன், “முஸ்லிம் அடையாளம்” காரணமாக அவரது பெயர் ரோட் ஷோவிலிருந்து கைவிடப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். இது ஒரு தவறான செய்தியை தெரிவித்ததாக, பாலன் கூறினார்.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டை மறுத்த சலாம்,எந்த பாகுபாடும் இல்லை என்று கூறினார்.
“நான் பாலக்காடு சென்று மோடியை சந்தித்து மலப்புரத்தில் பிரச்சாரம் செய்ய அழைத்தேன். ரோட்ஷோவில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது, ஆனால் அந்த நிகழ்ச்சிக்கான தலைவர்கள் பட்டியலில் எனது பெயர் இல்லை. மற்ற இரண்டு வேட்பாளர்களும் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்,'' என்றார்.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ஒருமுறை கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டுப் பேசியதை பிரதமருக்கு நினைவூட்டும் வகையில் ட்வீட்டரில் பதிவிட்டார். "இறுதியாக பிரதமர் மன்னிப்பு கேட்பாரா... தனது தவறான கருத்துக்கு...?" என்று அவர் கேட்டார்.
Read in English: PM Narendra Modi’s Kerala roadshow runs into row over ‘missing’ candidate; he says wasn’t invited
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“