உலகின் மிகப்பெரிதான கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
கானொலியில் பேசிய நரேந்திர மோடி, "வழக்கமாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 2 ஆண்டுகள் ஆகும். ஆனால், இவ்வளவு குறுகிய காலத்தில் , இந்தியா ஒன்றல்ல, இரண்டு தடுப்பு மருந்துகளைத் தயாரித்துள்ளது. மருந்து கண்டுபிடிப்பதில் பல மாதங்கள் உழைத்த விஞ்ஞானிகள் பலரும் இன்று சிறப்பு பாராட்டுக்கு உரியவர்களாக உள்ளனர், " என்று தெரிவித்தார்.
கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் ஆகிய இந்த இரண்டு தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை என்றும் அவர் கூறினார்.
மேலும், வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் இவ்வளவு பெரிய தடுப்பூசி இயக்கம் நடைபெற்றதில்லை. 30 மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையுள்ள 100- க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. இந்தியா முதலவாது கட்டத்திலேயே 3 கோடி தடுப்பூசி நிர்வகிக்கிறது. இந்த 3 கோடி சுகாதார அலுவலர்கள் மற்றும் முன்களப் போராளிகளுக்கு தடுப்பூசி போடும் செலவுகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். இரண்டாவது கட்டத்தில், முதியவர்கள், தீவிர உடல்நலக் குறைவு உள்ளவர்கள் என 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்" என்று தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போடுவது என மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். 1 மற்றும் 2வது டோஸ்களுக்கு இடையில் 1 மாத இடைவெளி இருக்கும். 2வது டோஸ் எடுத்துக் கொண்ட, 2 வாரம் கழித்து தான் கொரோனாவுக்கு எதிரான சக்தியை உங்களக் உடல் உருவாக்கும்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதற்காக டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது இதன் பெயர் கோவின் (Co WIN). ஆதார் எண்ணின் மூலம் பயனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு இரண்டாவது டோஸ் மருந்தும் தக்க சமயத்தில் கொடுக்கப்படும்.முதலாவது தடுப்பு மருந்து போடப்பட்ட பிறகு டிஜிட்டல் தடுப்பு மருந்து சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.