மோடி அணிந்த மணிப்பூர் மாஸ்க்: டுவிட்டரில் டிரெண்ட் செய்த பாஜக தலைவர்கள்
உரை நிறைவுற்ற சில நிமிடங்களிலேயே, மோடியின் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் புரோபைல் பிக்சராக முக கவசம் அணிந்தவாறு வணக்கம் சொல்லும் மோடியின் படம் வைக்கப்பட்டது.
டுவிட்டர், பேஸ்புக் புரோபைல் பிக்சர்களில் முக கவசம் அணிந்த போட்டோவை பிரதமர் மோடி வைத்திருந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் பலரும் தங்கள் புரோபைல் பிக்சர்களை, முக கவசம் அணிந்தவாறு மாற்றியுள்ளனர்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடுமுழுவதும் அமலில் இருந்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நேற்றுடன் ( ஏப்ரல் 14ம் தேதி) முடிவடைய இருந்த நிலையில், பிரதமர் மோடி, நாட்டு மக்களுடன் 4வது முறையாக நேற்று உரையாடினார். 25 நிமிடங்கள் அவர் உரையாற்றினார். இந்த உரையின்போது, அவர் மணிப்பூர் டவலை கழுத்தில் சுற்றியிருந்தார். ஊரடங்கு உத்தரவு, மே மாதம் 3ம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்த உரை நிறைவுற்ற சில நிமிடங்களிலேயே, மோடியின் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் புரோபைல் பிக்சராக முக கவசம் அணிந்தவாறு வணக்கம் சொல்லும் மோடியின் படம் வைக்கப்பட்டது.
ஊரடங்கு சமயத்தில் வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள், கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மோடியின் இந்த புரோபைல் பிக்சராக அமைந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மோடி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது அணிந்திருந்த மணிப்பூர் டவல், அம்மாநில மக்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.
மோடியின் பாணியை பின்பற்றி, பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள், மோடியின் ஆதரவாளர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தங்களது சமூகவலைதள பக்கங்களின் புரோபைல் பிக்சர்களை மோடி போன்று முக கவசம் அணிந்துள்ளதாக மாற்றி அமைத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil