Advertisment

பிரதமரின் நினைவுப் பரிசுகள் ஏலத்திற்கு வருகின்றன- என்ன காரணம் தெரியுமா?

PM Modi Gift:  ஏலம் விட்டு  அதில்  கிடைக்கும் வருவாயை கங்கை தூய்மை திட்டத்திற்காக செலவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Modi Gift Auction

PM Modi Gift Auction

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக வெளிநாடு சென்ற பயணத்தின் போதும்,  உள்நாட்டின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் போதும் கிடைத்த நினைவுப் பரிசுகளை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏலத்திற்கான குறைந்தபட்ச தொகை ரூ.200, அதிகபட்ச தொகை ரூ.2.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Advertisment

மத்திய அமைச்சர் மத்திய கலாச்சாரத் துறை  அமைச்சர்  பிரகலாத் படேல் கூறுகையில், "  மோடியின் உருவப்படங்கள், கலைப்படைப்புகள், தலைப்பாகைகள், சால்வைகள், வாள்கள் மற்றும் மத சிலைகள் உட்பட மொத்தம் 2,772 பொருள்கள் புது தில்லியில் உள்ள நவீன கலைக்கூடத்தில் (National Gallery of Modern Art) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன"என்று தெரிவித்தார்.

ஏலம் விட்டு  அதில்  கிடைக்கும் வருவாயை கங்கை தூய்மை திட்டத்திற்காக செலவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆன்லைனில் மூலம் நடத்தப்படும் இந்த நிகழ்வு செபடம்பர் 14 தொடங்கி அக்டோபர் மூன்றாம் தேதி வரை நடைபெறுகிறது.

publive-image

கடந்த ஜனவரி மாதத்திலும் இதே போன்று பிரதமரின் நினைவுப் பொருட்கள் ஏலம்  விடப்பட்டன. 14 நாட்கள் நடந்த ஏலத்தில் 1,800 பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அதில் எவ்வளவு வருவாய் வந்தது என்று இன்னும் அதிகாரபூர்வ தகவல் கொடுக்கப்படவில்லை.

கிடைத்த  மொத்த தொகையும் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கப்பட்டதாக அரசு தெரிவித்தது.

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment