கடந்த நவம்பர் 20ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உடனான தனது சந்திப்பின் போது "உங்களுடன் ஒன்றாக பணிசெய்ய விரும்புகிறோம்" என்று பிரதமர் தன்னிடம் கூறியதாக என்சிபி தலைவர் ஷரத் பவார் கடந்த திங்களன்று (நவம்பர் 2ம் தேதி) கூறினார். அரசியல் ரீதியாக இது சாத்தியமில்லை என்று பிரதமரின் இந்த கோரிக்கையை தான் மறுத்து விட்டதாகவும் ஷரத் பவார் தெரிவித்தார்.
பிரதமருடனான, ஷரத் பவார் சந்திப்பு, அவரின் மருமகன் அஜித் பவார் பாஜகவுடன் கைகோர்த்து ஃபட்னாவிஸ் அரசை உருவாக்கிய மூன்று நாட்களுக்கு முன்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏபிபி மஜா என்ற மராத்தி செய்தி சேனலுக்கு திங்கள்கிழமை மாலை ஷரத் பவாரின் பேட்டி நேரடி ஒளிபரப்பப்பட்டது .
பேட்டியின் போது, உங்களுக்கு ஜனாதிபதி பதவியை மோடி வழங்குவதாக கூறினாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஷரத் பவார், "அந்த கருத்து உண்மையில்லை, மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கவும், சுப்ரியா சூலேவிற்கு மத்திய அமைச்சரவையில் சேரவும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது," என்று பவார் கூறினார்
அரசியல் ரீதியாக பாஜகவுடன் இணைப்பு சாத்தியமில்லை என்று மோடியிடம் சொன்னதாக பவார் கூறினார். "நமது தனிப்பட்ட உறவுகள் அப்படியே இருக்கும், ஆனால் அரசியல் கண்ணோட்டத்தில் ஒன்றாக பயணிப்பது சாத்தியமில்லை" என்றேன் .
பின்னர் பிரதமர் தன்னைப் பார்த்து , கியுன் நஹின் (ஏன் இல்லை)? என்று நினைக்கீறிர்கள், பொருளாதார வளர்ச்சி, விவாசய நிலை , தொழில் வளர்ச்சி போன்றவைகளில் தேசிய வாத காங்கிரஸ் எடுத்த நிலைப்பாடும் பாஜகவின் நிலைப்பாடும் ஒன்றாகத் தான் உள்ளது. நிலைப்பாட்டில் வேறுபாடுகள் இல்லாத போது , கருத்து வேறுபாடு எங்கே?… நாம் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும், உங்கள் அனுபவம் அரசாங்கத்திற்கு பயனளிக்கும்" என்று பிரதமர் தன்னிடம் கூறியாதாக ஷரத் பவார் அந்த பேட்டியில் தெரிவித்தார்.
தேசிய அளவிலான பிரச்சினைகளில், தனது கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் என்றும், எதிர்ப்பதற்காக எதையும் எதிர்க்க மாட்டேன் என்று பிரதமரிடம் கூறியதாக ஷரத் பவார் தெரிவித்தார்.
அஜித் பவாரின் குறித்து பவார் கூறுகையில் “அஜித் பவாரின் கிளர்ச்சிக்கு எனது ஆதரவு இருப்பதாக அரசியலில் ஒரு பிரிவினரிடையே பேசப்பட்டதால், அன்று பிற்பகலுக்குள் உத்தவ் தாக்கரேவுடன் இனைந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதாக கூறினார். மேலும், அஜித் பவாரின் செயலுக்கு எனது ஆதரவு இல்லை என்று தெரிந்தவுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியை நோக்கி திரும்ப ஆர்ம்பித்துவிட்டனர் என்றும் தெரிவித்தார்.
மேலும், தான் தவறு செய்துவிட்டேன், தண்டனையை அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன், என்று அஜித் பவார் தன்னிடம் நேரில் மன்னிப்பு கேட்டதாகவும் ஷரத் பவார் கூறினார். அஜித் பவார் தனது தவறை ஏற்றுக்கொண்டதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற பொதுவான கருத்து கட்சி ஊழியர்களிடையே நிலவி வருவதை நான் அறிகிறேன் என்றும் ஷரத் பவார் கூறினார்.
உத்தவ் அரசாங்கத்தின் பதவியேற்பு நிகழ்ச்சியில் அஜித் பவாரை ஒதுக்கி வைப்பது என்பது நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவு தான், என்றும் பவார் கூறினார்.
பவாரின் நேர்காணலுக்கு பதிலளித்த பாஜக தலைவர் சுதிர் முங்கந்திவார் "இரு தலைவர்களுக்கிடையே நடந்த ஒரு விவாதம் இப்படி தொலைக்காட்சியில் பகிரப்படுத்தப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.