சிறப்புரிமை மீறும் வகையில், பிரதமர் மோடி பற்றி மக்களவையில் பேசியது குறித்து பாஜக எம்பிக்கள் அளித்த நோட்டீசுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மக்களவைச் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பிப்ரவரி 10 ஆம் தேதி ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில், நிஷிகாந்த் துபே மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சராக இருக்கும் பிரகலாத் ஜோஷி ஆகியோர் சமர்ப்பித்த நோட்டீஸ்களுக்கு பதிலளிக்குமாறு செயலகம் கேட்டுக் கொண்டது.
செவ்வாயன்று "ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்" என்ற தலைப்பில் ராகுல் காந்தி தனது உரையில், ஹிண்டன்பர்க்-அதானி விவகாரம் தொடர்பாக, தொழிலதிபர் கௌதம் அதானியின் சொத்து அதிகரிப்பையும், பிரதமர் மோடியின் பதவி உயர்வுக்கும் தொடர்புபடுத்தி பேசினார்.
வயநாடு எம்.பி.யான காந்தி கூறிய 18 கருத்துகளை சபாநாயகர் ஓம் பிர்லா நீக்கினார்.
இரு பாஜக தலைவர்களும் சபாநாயகருக்கு அளித்த நோட்டீஸ்களில் காந்தியின் கருத்துகள் "தவறான, இழிவான, அநாகரீகமான, பாராளுமன்றத்திற்கு விரோதமான, கண்ணியமற்ற மற்றும் குற்றஞ்சாட்டக்கூடியவை" என்று கடிதத்தில் கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“