sheikh hasina, bangladesh prime minister, sheikh hasina in india, sheikh hasina pm modi, sheikh hasina narendra modi, sheikh hasina meets modi, india news, indian express, பிரதமர் மோடி, ஷேக் ஹசினா, இந்திய செய்திகள்
பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தலைமையில் இந்தியா - வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மூன்று திட்டங்கள் இன்றே தொடங்கப்பட்டது.
Advertisment
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் ஷேக் ஹசினா பங்கேற்ற நிலையில், பிரதமர் மோடியை இன்று சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சு நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு, பாதுகாப்பு, வர்த்தகம், கலாச்சாரம், இளைஞர் விவகாரம், நீர்பகிர்மானம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள்.
இன்று ஒரே நாளில் பிரதமர் ஷேக் ஹசினாவும், பிரதமர் மோடியும் சேர்ந்து 3 திட்டங்களைத் தொடங்கி வைத்தனர். அதில் குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களுக்குத் தேவையான எல்பிஜி எரிவாயுவை வங்கதேசத்தில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வதாகும். இதுவரை கடந்த ஒரு ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே 12 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன, அதில் 3 திட்டங்கள் இன்றே தொடங்கப்பட்டன.
Exchange of Agreements and Inauguration of Bilateral Projects between India & Bangladesh https://t.co/e04PB6hRSo
பிரதமர் ஷேக் ஹசினாவுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறுகையில், "வங்கதேசத்துடன் நெருங்கிய நட்புறவை வைத்துக்கொள்ள இந்தியா விரும்புகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு உலகிற்கே உதாரணமாக இருக்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு இந்த பேச்சின் மூலம் மேலும் வலுப்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் இருவரும் சேர்ந்து 12 திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம். அதில் 3 திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டன"என்று தெரிவித்தார்.
#WATCH Bangladesh Prime Minister Sheikh Hasina in Delhi: Pyaaz mein thoda dikkat ho gya hamare liye. Mujhe maloom nahi kyun aapne pyaaz bandh kar diya? Maine cook ko bol diya ab se khana mein pyaaz bandh kardo. (Indian Govt had banned export of Onions on September 29) pic.twitter.com/NYt4ds9Jt2
பிரதமர் ஷேக் ஹசினா நிருபர்களிடம் பேசுகையில் "இந்தியா, வங்கதேசம் இடையிலான நட்புறவு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான முறையில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, ஆக்கப்பூர்வ பணிகளுக்கான அணு சக்தி, வர்த்தகம் ஆகியவற்றில் இரு நாடுகளுக்குஇடையே நல்ல உறவு இருக்கிறது" என்றார்.