பா.ஜ.க நிறுவன நாளில் கட்சி தொண்டகளிடம் காணொலி வழியாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இருத்தலுக்காக போராடும் கட்சிகள் நமக்கு எதிராக சதி செய்கிறார்கள். ஆனால், ஏழைகள், வறுமையில் இருப்பவர்கள், தலித்துகள் தாமரையைப் பாதுகாக்கிறார்கள்” என்று கூறினார்.
பா.ஜ.க நிறுவன தினத்தைத் தொடர்ந்து, ‘சமாஜிக் நியாய சப்தா’ அல்லது சமூக நீதி வாரமாகக் கடைப்பிடித்து, வியாழன் முதல் அக்கட்சியின் நிறுவன நாளைக் குறிக்கும் வகையில் டெல்லியில் தினசரி அமைப்பு பலத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூகத்தின் பல பிரிவினரை பா.ஜ.க சென்றடையவுள்ளது.
பா.ஜ.க-வின் 44-வது நிறுவன நாளில், கட்சித் தொண்டர்களின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, ஊழல், வாரிசு அரசியல் மற்றும் சட்டம் ஒழுங்கு சவால்களில் இருந்து இந்தியாவை விடுவிப்பதற்கான உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டினார். மேலும், “இருத்தலுக்கான நெருக்கடியை எதிர்த்துப் போராடும் கட்சிகள் நமக்கு எதிராக சதி செய்து கொண்டே இருக்கும், ஆனால், ஏழைகள், வறுமையில் இருப்பவர்கள், தலித்துகள், பழங்குடியினர் ஆகியோர் தாமரையைப் பாதுகாக்கிறார்கள்” என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பா.ஜ.க இந்தியாவுக்காக அல்லும் பகலும் உழைக்கிறது, எங்கள் கட்சி பாரத மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். பா.ஜ.க ஜனநாயகம் என்ற எண்ணத்தில் இருந்து பிறந்தது என்றும், ஊழலை எதிர்த்துப் போராட ஹனுமானிடமிருந்து உத்வேகம் பெறுகிறது என்றும் அவர் கூறினார்.
அரசின் இலவச ரேஷன் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களை சுட்டிக் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, சமூக நீதியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க நம்புகிறது, செயல்படுத்துகிறது. ஏனெனில், இது கட்சிக்கு விசுவாசத்தின் அர்த்தம் என்று கூறினார். “நம்முடைய கட்சி மற்றும் கட்சித் தொண்டர்கள் ஹனுமான் ஜியின் மதிப்புகள் மற்றும் போதனைகளிலிருந்து தொடர்ந்து உத்வேகம் பெறுகிறார்கள். கடல் போன்ற பெரிய சவால்களை எதிர்கொள்ள இந்தியா மிகவும் வலுவாக உருவெடுத்துள்ளது. அனுமன் ஜெயந்தி அன்று, அனைவருக்கும் அவரது ஆசீர்வாதம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
எதிர்க்கட்சிகள் குடும்பத்தைப் பற்றி மட்டுமே நினைக்கும் போது, பா.ஜ.க, பிரதமர் அன்ன யோஜன், ஜன்தன் யோஜனா மற்றும் பிற திட்டங்களின் கீழ் கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மைகளை வழங்கியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். “நாம் முதலில் தேசம் என்ற மந்திரத்தை எங்கள் குறிக்கோளாக ஆக்கியுள்ளோம். ‘சப்கா சத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’ (அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் முயற்சி) என்ற மந்திரத்துடன் பா.ஜ.க செயல்படுகிறது” என்று பிரதமர் மோடி கூறினார்.
2014 லோக்சபா தேர்தல் முடிவுகள் காவலர்களின் மாற்றம் மட்டுமல்ல, நாடு மீண்டும் எழுச்சி பெற இந்திய மக்களின் அழைப்பு என்று மோடி கூறினார். ‘பாத்ஷாஹி’ (மன்னராட்சி) மனப்பான்மை கொண்ட மக்களை அவர் கடுமையாக சாடினார். அவர்கள் 2014 முதல் ஏழைகள், பிற்படுத்தப்பட்டவர்கள், வறுமையில் இருப்பவர்களை அவமதித்து வருவதாகக் கூறினார். “சிலரின் மன்னராட்சி மனப்பான்மை மக்களைத் தங்கள் அடிமைகளாகக் கருதுகிறார்கள். 2014-ல், இந்த வறுமையில் உள்ளவர்களை கடுமையாகப் பேசி, இந்த மனநிலையை நிராகரித்தனர். அவர்களால் வெற்றிபெற முடியாதபோது, மன்னராட்சி மனப்பான்மை கொண்டவர்களிடையே வெறுப்பு மேலும் வளர்ந்தது” என்று பிரதமர் மோடி கூறினார்.
சட்டப்பிரிவு 370 திருத்தப்பட்டதை மேற்கோள் காட்டி, பா.ஜ.க-வுக்கு முந்தைய அரசாங்கங்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று மோடி கூறினார். பா.ஜ.க செய்து வரும் வேலையை அவர்களால் (எதிர்க்கட்சிகளால்) ஜீரணிக்க முடியவில்லை. இன்று ‘மோடி தெரி கப்ர் குதேகி’ (மோடி, உங்கள் கல்லறை தோண்டப்படும்) என்று வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கும் அளவுக்கு அவர்கள் மிகவும் அவநம்பிக்கை அடைந்துள்ளனர்,” என்று பிரதமர் மோடி கூறினார்.
‘சமாஜிக் நியாய சப்தா’ அல்லது சமூக நீதி வாரமாகக் கடைப்பிடித்து, வியாழன் முதல் அக்கட்சியின் நிறுவன நாளைக் குறிக்கும் வகையில் டெல்லியில் தினசரி அமைப்பு பலத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூகத்தின் பல பிரிவினரை பா.ஜ.க சென்றடையவுள்ளது.
தேசிய தலைநகரில் வியாழக்கிழமை 14,000 இடங்களில் பா.ஜ.க-வின் நிறுவன நாள் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தாலும், தினசரி நிகழ்வுகள் ஒரு ஆர்வமுள்ள குழு அல்லது மற்றொன்றை மையமாகக் கொண்டவை ஏப்ரல் 14 வரை செய்ய வேண்டிய பட்டியலில் உள்ளன.
இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா, பெங்காலி மார்க்கெட்டில் இருந்து சுவர் எழுதும் பிரச்சாரத்தைத் தொடங்கி, நகரம் முழுவதும் அதைத் தொடங்குகிறார். டெல்லி பா.ஜ.க-வின் யுவ மோர்ச்சா மருத்துவ முகாம் மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை முகாமையும், டெல்லி பா.ஜ.க-வின் பட்டியல் சாதி முன்னணி மற்றும் சிறுபான்மை முன்னணியும் இணைந்து ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. பா.ஜ.க-வின் கிசான் மோர்ச்சா, இயற்கை விவசாயம், யமுனை சுத்தம் செய்தல் மற்றும் ஸ்ரீ அன்னை அல்லது சிறுதானியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.