கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சிக்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி, 10 மாத இடைவெளிக்கு பிறகு, 20,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கும் நேற்று திருச்சி மாவட்டத்திற்கு வந்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுனர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று திட்டவட்டமாக குறிப்பிட்டு பேசியிருந்தார். அதேபோல் தமிழகத்தில் முன்னேற்றத்துடன் இந்தியாவும் முன்னேறும் என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
ஆங்கிலத்தில் படிக்க : As Modi, Stalin share the stage in Tamil Nadu, a play of words and the interplay
திருச்சியில், மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்காக, திருச்சி மற்றும் அருகிலுள்ள டெல்டா மாவட்டங்களில் இருந்து ஏராளமான பாஜக ஆதரவாளர்கள் வந்ததாக வந்திருந்த நிலையில், அவர்கள் 'மோடி, மோடி, மோடி' பரவலாக முழக்கமிட்டதால், முதல்வர் ஸ்டாலின் கூறிய ஒன்றிய அரசு என்ற வார்த்தை பெரிதாக கவனம் பெறாமல் போய்விட்டது.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி முன் பேசிய முதல்வர் ஸ்டாலின், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும், சென்னை-பினாங்கு மற்றும் சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவைகளை முன்னுரிமை அடிப்படையில் தொடங்க (மலேஷியா மற்றும் டோக்கியோ ஆகிய இடங்களில் அதிக தமிழ் புலம்பெயர்ந்தோர் உள்ளனர்), அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
/indian-express-tamil/media/media_files/kgTY2Bwiv7cs6Qf1wlpJ.jpg)
மேலும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் அதன் பங்களிப்பையும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தமிழ்நாட்டில் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். மத்திய அரசால் நடத்தப்படும் பொதுத்துறை நிறுவனமான பி.ஹெச்.இ.எல், மாநிலத்தில் உள்ள எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கான ஆர்டர்கள் கணிசமாக குறைந்துள்ளதாகவும், இதனால் திருச்சி பகுதியில் இயங்கி வரும் குறுந்தொழில்களை பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது என்றும் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு மாநிலத்திற்கு கூடுதல் நிவாரணம் கோரி, அவற்றை "தேசிய பேரிடராக" அறிவிக்க வேண்டும் என்று "நாங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைக்கிறோம் என்று நினைக்க வேண்டாம்! இந்தியாவில், கோடிக்கணக்கான மக்களுக்கு நெருக்கமாக இருப்பதும், கல்வி, மருத்துவம், அத்தியாவசியத் தேவைகள் மற்றும் உதவிகளை வழங்குவதும் மாநில அரசுகளின் முதன்மைக் கடமையாகும். அரசிடம் கோரிக்கை வைப்பதும், மாநில உரிமைகளை நிலைநாட்டுவதும் அங்கு வாழும் மக்களின் கோரிக்கையே தவிர, அரசியல் முழக்கங்கள் அல்ல என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி தனது உரையில், திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் ஆகியோரின் சமீபத்திய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்த மோடி, இதுபோன்ற சவால்களைச் சமாளிக்க மாநிலத்திற்கு மத்திய அரசு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.
இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு, அதன் துடிப்பான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் அதன் பங்களிப்பு ஆகியவற்றை உயர்த்தி பேசிய மோடி, மாநிலத்திற்காக தனது அரசாங்கம் அர்ப்பணித்த முயற்சி மற்றும் நேரத்தைப் பற்றி பேசினார்.
/indian-express-tamil/media/media_files/K4FWBTONcLSHHoBfotrA.jpg)
கடந்த ஆண்டில் 40க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட முறை சுற்றுப்பயணம் செய்துள்ளனர். அதே நேரத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்கு அதிக நிதியை வழங்கியுள்ளது. 2014க்கு முந்தைய பத்தாண்டுகளில், மாநிலங்களுக்கு ரூ.30 லட்சம் கோடி வழங்கப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளில், மத்திய அரசிடமிருந்து ரூ.120 லட்சம் கோடி கிடைத்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்தக் காலகட்டத்தில் தமிழகத்துக்கு 2.5 மடங்கு அதிகப் பணம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் பேசியதை நேரடியாகப் பேசிய மோடி, தனது அரசு நெடுஞ்சாலைத் துறையில் மாநிலத்தில் 3 மடங்கு அதிகமாகவும், ரயில்வே துறையில் 2.5 மடங்கு அதிகமாகவும் செலவிட்டுள்ளது என்று கூறிய அவர், "தமிழக இளைஞர்களிடையே ஒரு புதிய நம்பிக்கை எழுவதை என்னால் காண முடிகிறது" என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“