Advertisment

9 ஆயிரம் விருந்தினர்கள், அண்டை நாட்டுத் தலைவர்கள்: பிரமாண்டமான பதவியேற்பு விழாவிற்கு தயாராகும் ராஷ்டிரபதி பவன்

பாதுகாப்பு நெறிமுறை மற்றும் விஐபி வருகை காரணமாக விருந்தினர்கள் சுமார் நான்கு மணி நேரம் அமர்ந்திருக்க வேண்டியிருக்கும்.

author-image
WebDesk
New Update
Narendra Modi swearing in ceremony

Narendra Modi oath taking ceremony

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ரெட் கார்பெட், லெதர் மெத்தையுடன் கூடிய நாற்காலிகள், வாட்டர் ஃபிரிட்ஜஸ், மிஸ்ட் ஃபேன்ஸ்- ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் குழுவின் பிரமாண்டமான பதவியேற்பு விழாவிற்கு ராஷ்டிரபதி பவன் தயாராக உள்ளது, இதில் அண்டை நாட்டுத் தலைவர்கள் உட்பட சுமார் 9,000 விருந்தினர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.

Advertisment

2 மணி நேரம் நடைபெறும் இந்த விழா இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் தலைவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருப்பார்கள்.

இலங்கை அபதிபர் ரணில் விக்கிரமசிங்கே; மாலத்தீவு அதிபர் மொஹமட் முய்ஸு; சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி அகமது அஃபிஃப்; பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா; மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத்; நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தாமற்றும் பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே- இந்த ஏழு வெளிநாட்டு தலைவர்களும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர்.

2019 பதவியேற்பு விழாவின் போது குளிர்ந்த நீர் கிடைக்காதது குறித்து புகார்கள் எழுந்ததால், இந்த முறை வெப்பத்தை கருத்தில் கொண்டு வாட்டர் ஃபிரிட்ஜஸ் மற்றும் மிஸ்ட் ஃபேன்ஸ் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு நெறிமுறை மற்றும் விஐபி வருகை காரணமாக விருந்தினர்கள் சுமார் நான்கு மணி நேரம் அமர்ந்திருக்க வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு சிறப்புமிக்க விருந்தினரும் மந்திரி சகாக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வருவார்கள், அவர்களுக்கு நெறிமுறைப்படி ஒரு முக்கிய இடம் வழங்கப்படும். பின்னர் மாலை ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கும் சிறப்பு விருந்திலும் தலைவர்கள் கலந்துகொள்வார்கள்.

பிரதமருக்குப் பிறகு பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் கேபினட் அமைச்சர்களும் முன்னுரிமை அடிப்படையில் அமர்ந்திருப்பார்கள். அழைக்கப்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், முன் வரிசையில் இருந்து நிகழ்வைக் காணவுள்ளனர்.

சுவாரஸ்யமாக, புதிய பாராளுமன்ற கட்டிடம் அல்லது பிற பிரதம திட்டங்களுக்கு பங்களித்த ஷ்ரம்ஜீவிஸ் உட்பட பல சிறப்பு அழைப்பாளர்கள் இருக்க வாய்ப்புள்ளது.

விழாவிற்கு அழைக்கப்பட்ட 10 லோகோ பைலட்டுகளில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவும் ஒருவர். ஆதாரங்களின்படி, திருநங்கைகள் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் பயனாளிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.

2019 ஆம் ஆண்டில் மோடியின் பதவியேற்பு விழாவில் பிம்ஸ்டெக் (BIMSTEC) நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டதைப் போலவே இந்த நிகழ்வு உள்ளது. 2014ல் மோடி முதல்முறையாக பிரதமராக பதவியேற்றபோது சார்க் நாடுகளின் தலைவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலக செய்திக்குறிப்பில்,

2024 ஜூன் 09 அன்று இரவு 07.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணத்தை செய்து வைப்பார்.

ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு ஜூன் 8ம் தேதி காவலர் மாறுதல் விழா (Change of Guard Ceremony) நடைபெறவில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு - ஜூன் 15 மற்றும் ஜூன் 22-ஆம் தேதி நடைபெறாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18வது மக்களவைக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதி துவங்கும் என தெரிகிறது.

Read in English: All set at Rashtrapati Bhavan: Red carpet rolled out for 9,000 guests, heads of State

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

PM Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment