மறைந்த அருண் ஜெட்லி க்கு வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் . அந்த இரங்கல் செய்தியின் சில முக்கிய வார்த்தைகள் இங்கே :
நான் எனது மதிப்பு மிக நண்பனை இழந்துள்ளேன். அருண் ஜெட்லி போன்று பிரச்சினைகள் நுண்ணறிவால் ஆராயக் கூடியத் தன்மை , விஷயங்களை நுணுக்கமாக புரிந்து கொள்ளும் இயல்பு நம்மில் சில பேரே. அருண் ஜெட்லி நன்றாக வாழ்ந்தார், நம் அனைவருக்கும் சந்தோசமான நினைவுகளை மட்டுமே விட்டு சென்று இருக்கிறார் .
பாஜக-அருண் ஜெட்லிக்கு இடையில் உடைக்கமுடியாத பிணைப்பு இருந்தது. தீவிர மாணவர் தலைவராய் இருந்து, அவசர காலத்தின் போது நமது ஜனநாயகத்தை பாதுகாத்தவர். பாஜக வின் அரசியல் சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் சமூகத்தில் பல தரப்பட்ட மகளுக்கு எடுத்து செல்வதில் இந்த கட்சியின் பிரதான முகமாய் இருந்தார்.
பல மந்திரி பொறுப்புகளை வகித்த அருண் ஜெட்லி , இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் மேம்படவும், நமது தேசப் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தவும், மக்களைச் சார்ந்த சட்டங்களை உருவாக்கவும், பிற நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்தவும் பல முயற்சிகளை மேற்கொண்டவராவார்.
அர்த்தமாக்கப் பட்ட வாழ்க்கை, சிறந்த நகைச்சுவை, ஆளுமை கொண்ட அருண் ஜெட்லி சமூகத்தில் அனைத்து மக்களாலும் போற்றப்பட்டவர். இந்தியாவின் அரசியலமைப்பு, வரலாறு, பொதுக் கொள்கை, ஆளுகை மற்றும் நிர்வாகம் குறித்து ஆழமான அறிவைக் கொண்டு பன்முகத்தன்மையோடு வாழ்ந்தவர்.
அருண் ஜெட்லி ஜி ஒரு அரசியலில் மாபெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியவர் , சட்ட அறிவைப் பெற்றவர் . அவர் காலமானது மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது மனைவி சங்கீ ஜி மற்றும் மகன் ரோஹன் ஆகியோரிடம் பேசினேன், இரங்கல் தெரிவித்தேன்.
ஓம் சாந்தி.