இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. கிரிப்டோகரன்சி மூலம் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு மோடி கணக்கில் இருந்து தொடர்ச்சியான ட்வீட்கள் அனுப்பப்பட்டன.
இந்த செயல்பாடு குறித்து அறிந்திருப்பதாகவும், சமரசம் செய்யப்பட்ட கணக்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ட்விட்டர் தெரிவித்தது.
"நாங்கள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மேலும், அதிகப்படியான ட்விட்டர் அக்கவுண்ட்கள் இதுபோன்று பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது எங்களுக்குத் தெரியாது, ”என்று ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்தார்.
ஹேக் செய்யப்பட்ட கணக்கில் இருந்து அனுப்பப்பட்ட ட்வீட்கள்
பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு கிரிப்டோகரன்சி மூலம் நன்கொடை வழங்குமாறு ஹேக் செய்யப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கு பின்தொடர்வோரைக் கேட்டுக் கொண்டது. கடந்த ஜூலை மாதம், உலகின் முக்கிய நபர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளிட்டவர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு கிரிப்டோ கரன்சிகளை நன்கொடை அனுப்புமாறு கோரப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil