narendra modi mother: பிரதமர் மோடி தாயார் இன்று காலை உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள யு.என். மேத்தா இதய நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அம்மாவை குறித்து ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது. துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளம், மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை தனது தாயாரிடம் உணர்ந்தேன் . புத்திசாலித்தனத்துடன் வேலை செய்ய வேண்டும்; தூய்மையான வாழ்க்கையை வாழ வேண்டும். 100வது பிறந்தநாளில் எனது தாயார் சொன்ன விஷயம், எப்போதும் நினைவில் இருக்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.