Leuva Patidar தலைவர் நரேஷ் படேல், தற்போது காங்கிரஸில் இணைந்துள்ளது முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது. அவர் விதித்த நிபந்தனைக்கு கட்சியில் எதிர்ப்பு இருந்தாலும், குஜராத்தில் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரசாந்த் கிஷோரை ஈடுபடுத்த வேண்டும் என்று விரும்புகிறார். இறுதியாக, படேல் விரும்பியப்படி பிரசாந்த் கிஷோரை களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகறது.
பிரசாந்த் கிஷோரை விமர்சிக்கும் காங்கிரஸ் தலைவர்கள், அவரும் படேல்-வும் இணைந்து செயல்படுவதாக கூறினார்கள். காங்கிரஸ் கட்சிக்கு படேல்லை வேட்பாளராக நிறுத்த வேண்டும் ஆனால் பட்டேலுக்கு தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இருந்திட வேண்டும். படேல் ஸ்ரீ கோடல்தாம் அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். இந்த அறக்கட்டளை, ராஜ்கோட் அருகே உள்ள லியுவா படிதர் சமூகத்தின் புரவலர் கடவுளான கோடியாரின் பெரிய கோவிலை நிர்வகிக்கிறது.
காங்கிரஸில் அவரது என்ட்ரியால் லியுவா படிதார் சமூக மக்களை கவர முடியும் என கட்சி கருதுகிறது. முக்கியமாக சௌராஷ்டிரா பகுதியில், அந்த சமூகத்தில் அரசியல் வாக்குகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இசை பிரியாவிடை
ராஜ்யசபா தலைவர் எம்.வெங்கையா நாயுடு இன்று( வியாழக்கிழமை) சபையில் இருந்து ஓய்வு பெறும் 72 உறுப்பினர்களுக்கு விருந்து அளிக்கிறார். காலையில், ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு சபை பிரியாவிடை அளிக்கப்படும். மாலையில் அவர்கள் அனைவரும் நாயுடுவின் இல்லத்தில் ஒன்று கூடுவார்கள் என தெரிகிறது.
விருந்தில், சில எம்.பி.க்கள் தங்களது திறமையை வெளிபடுத்த திட்டமிட்டுள்ளனர். அதாவது, டிஎம்சியின் சாந்தனு சென் கிட்டார் வாசிப்பார் என்றும், அவரது சக ஊழியர் டோலா சென் ரவீந்திர சங்கீதம் பாடுவார் என்றும் தெரிகிறது. திமுகவின் திருச்சி சிவா தமிழ் பாடல்கள் மூலம் அனைவரையும் கவர திட்டமிட்டுள்ளார். அதே போல், பாஜகவின் ரூபா கங்குலியும் பாட உள்ளதாக கூறப்படுகிறது.
ஆலோசனை போர்டு
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை புதன்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார். ராஜ்யசபாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் சர்மா, சபையில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆனால், ஹரியானாவில் இருந்து அவர் மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை.
ஷர்மாவின் சொந்த மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. அப்பகுதியில் கட்சியின் நிலைமை குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil