ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பள்ளிக் கல்வித் துறை, பள்ளிகளில் காலை கூட்டங்கள் தேசிய கீதத்துடன் தொடங்குவதை கட்டாயமாக்கியுள்ளது.
அதன் சமீபத்திய சுற்றறிக்கையில், தேசிய கீதத்தை நிலையான நெறிமுறை என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலை அசெம்பிளிகளின் நிகழ்ச்சிகள் ஒரே மாதிரியாக பின்பற்றப்படவில்லை என்று கூறுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் முதல் அமைச்சர் மெகபூபா முஃப்தி, “உண்மையான பிரச்னைகளில் இருந்து திசை திருப்பும் நடவடிக்கை” எனக் கூறியுள்ளார். பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அலோக் குமார் கையெழுத்திட்ட இந்த உத்தரவில், பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பள்ளிகளில் தேசிய கீதத்துடன் தொடங்கும் 20 நிமிட கூட்டத்தை கட்டாயமாக்குகிறது.
அந்த அறிக்கையில், “காலைக் கூட்டங்கள் நமது தேசிய அடையாளத்தின் பெருமையை ஊட்டுவது மட்டுமல்லாமல் மாணவர்களிடையே ஒழுக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கும். எனவே, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்கள் இருவரும் இந்த பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளிகளில் தினமும் காலையில் தேசிய கீதம் வாசிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 இன் கீழ் கட்டாயமாக மாணவர்களின் தலைமைப் பண்புகளை வளர்ப்பதற்கும் திறன்களை மேம்படுத்துவதற்கும் பள்ளிகள் முன்வர வேண்டும் என மேலும் கூறுகிறது.
இந்த உத்தரவுக்கு பதிலளித்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, '“எனது தலைமுறையினர் பள்ளிகளிலும், பொது விழாக்களிலும், திரைப்படம் முடிந்ததும் திரையரங்குகளிலும் கூட தேசிய கீதத்தைப் பாடி வளர்ந்தனர். இது ஒரு விதிமுறையாக பார்க்கப்பட்டது, அரசாங்கத்திடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை” என்றார். மேலும், “இது உண்மையான பிரச்னைகளில் இருந்தும் திசை திருப்பும் நடவடிக்கை ” என்றார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : National anthem made mandatory at morning assembly in J&K schools to ‘instil pride, unity’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“